TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 அறிவியல் பாடத்தி்ற்கான மாதிரி வினாத்தாள்( 6 ஆம் வகுப்பு அறிவியல் ) கிழே உள்ள லிங்க் click செய்து கொள்ளவும் (அன்னை அகாடமி விழுப்புரம் மாவட்டம்) TNPSC Group 2 and Group 4 science model question paper download here
Posts
Showing posts from April 23, 2022
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறான முறைகளில் நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திலேயே போலிச் சான்றிதழை கண்டறியும் ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்சின் 2022 -ஆம் ஆண்டு இளம் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க உச்சிமாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர்செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிகளில் மூர்க்கமாக செயல்படும் மாணவர்களுக்கு அதிக தண்டனை கொடுக்க வேண்டும். என்ற கருத்து குறித்த கேள்விக்கு, "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே, ஆகையால் இரண்டாவது அன்னையாக விளங்கக்கூடிய ஆசிரியர்கள் தான் மாணவர்களை திருத்த வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...
- Get link
- X
- Other Apps
குரூப்-4 தேர்வு விண்ணப்பத்தில் இணைக்க தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பெற பள்ளிகளில் குவியும் தேர்வர்கள் குரூப் - 4 தேர்வுக்கான விண்ணப் பத்தில் இணைக்க, தாங்கள் படித்தபள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுவதில் தேர்வர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப குரூப் - 4 தேர்வு, வரும் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஏப்ரல்28-ம் தேதி கடைசிநாள் என்பதால்,ஆயிரக்கணக்கானோர் விண்ணப் பித்து வருகின்றனர். மேலும், 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்திருந்தால், பணி நியமனத்தில் 20 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்வழிக்கல்வியில் படித்த விண்ணப்பதாரர்கள், அதற்கான சான்றிதழை பெற தாங்கள் படித்த பள்ளிகளில் குவிந்து வருகின்றனர். இதுதொடர்பாக, கோவையைச் சேர்ந்த தேர்வர்கள் சிலர் கூறும்போது, ''சிலர் ஒன்றாம் வகுப்பு ...
- Get link
- X
- Other Apps
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு... இன்னும் 4 நாட்கள் மட்டுமே..முக்கிய அறிவிப்பு..!!!! தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு , இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தபட்டது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால், மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்ட நிலையில், கடந்த வருடம் பொது தேர்வுகள் நடைபெறாத காரணத்தால், இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியை கடந்த மாதம் 7ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது .மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும் எனவும் ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு...
- Get link
- X
- Other Apps
TNPSC Group-4 இலவச பயிற்சி வகுப்புகள்; ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க.! முழு விபரம் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் TNPSC Group-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு இன்று முதல் வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தேர்விற்கு தேவையான சமச்சீர்கல்வி பாடப்புத்தகம் மற்றும் புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பம...
- Get link
- X
- Other Apps
முதுகலை ஆசிரியர் தேர்வு: திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆன்லைனில் வெளியீடு கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வணிகவியல், வரலாறு பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 2018-2019-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 2019-ம் ஆண்டு செப்.27 முதல் 29-ம் தேதி வரை கணினிவழி போட்டித் தேர்வை நடத்தியது. அதன் முடிவுகள் 2019 அக். 18 மற்றும் 21-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைதொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு 2019 நவ. 8 மற்றும் 9-ம் தேதி நடத்தப்பட்டு, பாட வாரியாக தேர்வுபட்டியல் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, வணிகவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் பணியிடத்தை நிரப்ப சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் அரசுத் துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை செயலர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணை: அரசுத் துறைகளில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து துறைகளிடம் இருந்து தொகுதி வாரியாக பணியிடங்கள் விவரங்கள் பெறப்பட்டன. அதன்படி, எஸ்சி பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 8,173 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 2,229 இடங்களும் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பணியிட பற்றாக்குறையை, துறை சார்ந்து சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பணியிடங்களை விரைவாக நிரப்ப சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் இ...