குருப் 4 தேர்விற்கு 8.39 லட்சம் பேர் விண்ணப்பம்! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 4 போட்டித் தேர்விற்கு நேற்று (ஏப். 19) மாலை வரையில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 68 பேர் விண்ணபித்துள்ளனர். டிஎன்பிஎஸ் குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில், மொத்தம் 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 8 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (ஏப்ரல் 20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் 4 தேர்வுக்கு நேற்று (ஏப்.19) மாலை 5 மணி வரையில், 8 லட்சத்து 39 ஆயிரத்து 68 பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 எழுத்துத் தேர்வு ஜூலை மாதம் 24ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். வரும் 28ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்" எனத் தெரிவிக்கப்ப
Posts
Showing posts from April 20, 2022
- Get link
- X
- Other Apps
மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை தரப்படும்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை தரப்படும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 12,524 மக்கள் நல பணியாளர்களுக்கு மாதம் ரூ,7,500 ஊதியத்துடன் மீண்டும் வேலை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலப் பணியாளர்கள் யாரேனும் இறந்திருந்தால் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
TNPSC Exam: இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 தேர்வுகள்; தகுதிகள் என்ன? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கிய தேர்வுகளுக்கான விண்ணப்பச் செயல்முறை இந்த மாதத்தில் முடிவடைகின்றன. அந்த தேர்வுகள் என்ன? அதற்கான தகுதிகள் என்ன? போன்ற முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். குரூப் 4 தேர்வு தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியாளர்களை நிரப்பும் குரூப் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022 மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 7304 நிரப்பப்படும் பதவிகள்: இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து
- Get link
- X
- Other Apps
காலி பணியிடங்கள் விரைவில் நிரப்படும்.. பேரவையில் அமைச்சர் பிடிஆர் உறுதி..! தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், "கருவூலத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரித்து காணப்படுகிறது. மாவட்ட சார் கருவூல கணக்கு அலுவலகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு கணக்கு வழக்கும் பார்க்கப்படுகின்றன. எனவே, அங்கு ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 243 அலுவலகத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும்" என்றார். இதற்கு பதில் அளித்த நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு நடத்துவதில் பல பிரச்சினைகள் உள்ளன. நீதிமன்றம், கொரோனா என பல தேர்வுகள் தள்ளிப்போய் இருப்பதால் தான் காலி பணியிடங்கள் அதிகரிப்புக்கு காரணம். மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது, அரசாணை அமல்படுத்தப்படுவது, சான்றிதழ் சரிபார்பது என அனை
- Get link
- X
- Other Apps
10, 11, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் பொதுத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட் இன்று (ஏப்.20) மதியம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில், ''10, 11, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதவிர பத்தாம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் ஏப். 27 முதல்29-ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் பள்ளிகளிலேயே நடக்க உள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது
- Get link
- X
- Other Apps
TANCET நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு.!! முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.பி.ஏ. எம்.சி.ஏ.படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் "டான்செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை ஒவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி, 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் (ஏப்ரல்) 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, டான்செட் பொது நுழைவு தேர்வுக்கு வரும் 21-ம் தேதி மாலை 4 மணி வரை https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது