ஆசிரியர் தகுதி தேர்வு.. ஏப். 26 வரை விண்ணப்பிக்கலாம்.. கால அவகாசம் நீட்டிப்பு.. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் மார்ச் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தேர்வினை எழுத ஏப்ரல் 13அஅம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வர் கோளாறு காரணமாக விண்ணப்பிக்க முடியவில்லை என்பதால் காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஏப்.26 வரை ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது.." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Posts
Showing posts from April 18, 2022
- Get link
- X
- Other Apps
டெட் தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) புதிய பாடத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 13-ல் நிறைவடைந்தது. கடைசி இரு நாட்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இணையதளம் முடங்கியதால், பெரும்பாலான பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், டெட் தேர்வுக்கான புதிய பாடத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. முதல் தாள், 2-ம் தாள் என இரு பிரிவுகளுக்கும் திருத்தப்பட்ட பாடத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பட்டதாரிகள் www.trb.tn.nic.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். அதற்கேற்ப தேர்வர்கள் தயாராக வேண்டும். காலஅவகாசம் குறைவாக உள்ளதால், விண்ணப்பப் பதிவை நீட்டிக்க வாய்ப்புகள் இல்லை என்று டிஆர்பி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- Get link
- X
- Other Apps
TNPSC குரூப்-4க்கு விண்ணப்பிக்காத நபர்களின் கவனத்திற்கு.! தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு..! குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு ஏப்ரல் 28-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 24-ம் தேதி தேர்வு நடைபெறும். தேர்வு அன்று காலை தேர்வு 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரத்திற்குத் தேர்வு நடைபெறும். மொத்தம் 7,301 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவு மூலம் பூர்த்தி செய்யப்படும். 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியிடப்படும். நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என தேர்வாணையம் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை 7.08 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையம்...