TET தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..? கல்வி அமைச்சர் முக்கிய தகவல்.!!!! தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பட்டப்படிப்புடன் பி.எட், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான TN TET-தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோன்று இந்த ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியாகியது. இதையடுத்து தேர்வுக்கான விண்ணப்பபதிவு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துவரும் நிலையில், டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துள்ள நிலையில், காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் ...
Posts
Showing posts from April 17, 2022
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடக்கம் - கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடக்கம் செய்யப்பட்டதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் ஆயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை முதல் 2 வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தேவை: அன்புமணி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teacher Eligibility Test (TET)) தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழகத்தில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (National Council for Teacher Education) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை நடத்தப்பட்டிருக்கும் 'டெட்' தேர்வுகள் மூலம், 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்த நிலையில், எஞ்சியவர்கள் அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். கடைசியாக 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டடெட் தேர்வு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020, 20...
- Get link
- X
- Other Apps
போட்டித் தேர்வுகள்: பொது அறிவு பாடங்களுக்கு தயாராவது எப்படி? வெற்றியாளர்கள் எதையும் புதிதாக செய்துவிடுவது இல்லை. பிறர் செய்வதையே சற்று வித்தியாசமாக செய்கின்றனர். போட்டித் தேர்வுகளிலும் அப்படித்தான். வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வி கண்டவர்களுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசமே அவர்களது தயாரிப்பு முறைதான். தயாரிக்கும் உத்தியில்தான் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளில் மிக முக்கியமானது, நாம் தயாராகிற தேர்வின் பாடத் திட்டத்தை (Syllabus) முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். முழுமையான பாடத் திட்டத்தின் ஒவ்வொரு உட்பிரிவையும் தெளிவாக தெரிந்துகொள்வது தயாரிப்பின் முதல்படி. பொது அறிவு கேள்விகள் தொடர்பாக இருக்கும் பாடத் திட்டங்களை முதலில் முழுமையாக புரிந்துகொள்வது அவசியம். இந்திய அரசியலமைப்பு, இந்திய வரலாறு, இந்திய புவியியல், இந்திய பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் என 5 வகைகளில் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே, இத்தலைப்புகளை ஒட்டிய முழுமையான பாடத் திட்டம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு, இந்த பாடத் திட்டங்களில் இர...
- Get link
- X
- Other Apps
2022 ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பட்டப்படிப்புடன் பி.எட், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான TN TET-தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோன்று இந்த ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளியாகியது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய பாடத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் ஜூன் 27ம் தேதியும், இரண்டாம் தாள் ஜூன் 28 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்...