உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை.! பதிவு மூப்பு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார். ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, அரசுப் பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போது பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கிறது. உடற்கல்வி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 25 ஆண்டுகளாக பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பணியை எதிர்நோக்கி காத்துக்கிடக்கிறார்கள். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு முறையின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தவிர்த்து பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். விளையாட்டு ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட அதிக நேரம் தேவைப்படுவதால், படிப்பதற்கான நேரம் மிகவும் குறைவு எனக்கூறுகின்றனர். மேலும் விள...