EXAM vs FEAR:
EXAM vs FEAR: திட்டமிட்டால் தேர்வும் நம் வசமே! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயப்படாமல் தேர்வுக்கு திட்டமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார். சென்னை தியாகராய நகரில் தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சார்பில் செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்க கூடாது என்பதற்காக திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 35 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டம் குறைத்தால் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தயாரவதில் சிக்கல் ஏற்படும். எனவே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு பயமின்றி தயாராக வேண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மதமாற்றம் புகார் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர் எ