தமிழ்நாட்டில் 3.5 லட்சம் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.. TNPSC குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றார். இதற்கு நிபுணர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த குழுவுடன் முதற்கட்ட ஆலோசனையும் நடைபெற்று முடிந்துள்ளாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த குழு 6 மாதத்தில் பரிந்துரைகளை தரவும் திட்டமிட்டுள்ளதாக தெர
Posts
Showing posts from April 12, 2022
- Get link
- X
- Other Apps
பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில் இதெல்லாம் பழசு.. அதிமுக திட்டங்களின் தொடர்ச்சியை அறிவித்த திமுக நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பழைய திட்டங்களின் தொடர்ச்சியான அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறை கடந்த அதிமுக ஆட்சியில் 60 கோடி ரூபாய் செலவில் 3ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலை அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் நேற்றைய பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில் 7500 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அதேபோன்று கடந்த அதிமுக ஆட்சியில் 6 ஆயிரத்து 29 உயர்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. நேற்றைய தினம் வெளியான பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில் 2713 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கலைத் திருவிழா கடந்த
- Get link
- X
- Other Apps
9,494 ஆசிரியர் பணியிடங்கள்... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!! ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் என்று சட்டப்பேரவையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல திட்டங்களை தெரிவித்தார். தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், தொடக்கப்பள்ளிகளில் 7500 திறன் வகுப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டு 9 ஆயிரத்து 494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று கூறினார். 15 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருந்தாலும் 9 ஆயிரத்து 494 பேர் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள் என கூறியவர், அரசு பள்ளி மாணவர்களின் செயல்வழி கல்வியை ஊக்குவிக்க பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.