10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு- 27, 28, 29ஆம் தேதிகளில் நடக்கிறது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வருகிற 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடக்க உள்ளது. இந்த பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி அத்தேர்வில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வு எழுத அறிவிக்கப்படுகிறார்கள். அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெற உள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளியில் இருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்க பெறாதவர்கள், இந்த அறிவிப்பை தெரிந்து கொண்டு, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளும் பொருட்டு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.
Posts
Showing posts from April 10, 2022
- Get link
- X
- Other Apps
ஏப்ரல் 20 முதல்.. தனியார் பள்ளிகளில் இலவச LKG மாணவர் சேர்க்கை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!! தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள் அறியும் வகையில் தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கின்றது. அதன்படி எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு வரும் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொட
- Get link
- X
- Other Apps
TNTRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - உத்தேச விடைகள் வெளியீடு! முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்காக நடைபெற்ற தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு கடந்த 12 பிப்ரவரி 2022 முதல் 20 பிப்ரவரி 2022 வரை நடைபெற்ற நிலையில்,இத்தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளன. அதன்படி,2.13 லட்சம் பேர் எழுதிய தேர்வின் உத்தேச விடைகள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.விடைக்குரிப்பின்மீது தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஆதாரத்துடன் 9 ஏப்ரல் 2022 மாலை 06.00 மணி முதல் 13 ஏப்ரல் 2022 வரை 5.30 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
TNPSC நடத்திய மூன்று தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, மூன்று தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு துறையில்,இளநிலை அறிவியல் அலுவலர் பதவியில், 72 இடங்கள்; நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட உதவியாளர் பதவிக்கு, நான்கு இடங்கள்; ஆராய்ச்சி உதவியாளர் பணியில் ஆறு இடங்களை நிரப்ப, போட்டி தேர்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டன. இதற்கான, விடை திருத்தம் முடிந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களும், சான்றிதழ் சரிபார்ப்பு தேதியும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- Get link
- X
- Other Apps
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. மாணவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்..!!!! தமிழகத்தில் கொரோனா காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு தாமதமாக திறக்கப்பட்டன. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் பொது தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதே சமயம் கால அவகாசம் குறைவாக இருப்பதால் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்படவேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதல்வர் சொன்னதுபோல் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்ததை தேர்வில் நம்பிக்கையுடன் எழுதுங்கள். தேர்வு குறித்து மாணவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் போது பதற்றம் அடையாமல் இருப்பதற்காக