முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்விற்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. 2020 - 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) No. 01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) கடந்த 12.02.2022 முதல் 20.02.2022 வரை இருவேளைகளில் நடைபெற்றது.2,13,859 தேர்வர்கள் 17 பாடங்களுக்கு தேர்வெழுதியுள்ளனர். இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தனது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . Candidates who have appeared for the exam can download using the Step given below : 1. Go to : https://trbpgetviewqp.onlineapplication form.org/Objection TrackerPortalWeb/loginPage.jsp 2. Enter Registration Number 3. Select Date of Bir
Posts
Showing posts from April 9, 2022
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து முத்தரசன் கோரிக்கை! ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும் என்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீட்டிக்க உரிமை இல்லை என்றும், சம்பள உயர்வு பெற உரிமை இல்லை என்றும் சமீபத்தில் நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Get link
- X
- Other Apps
விழுப்புரம் மாவட்டத்தில் டெட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு. அரசு அறிவித்த சூப்பர் அறிவிப்பு.!!!!! விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டுவரும், தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டித் தேர்வில் கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், 09.04.2022 அன்று முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படயிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும்
- Get link
- X
- Other Apps
பள்ளி மேலாண்மைக் குழு - பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு!! பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினர்கள் நியமனத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகக் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-இன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்.. அரசுப் பள்ளிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் நிர்வகிக்கக்கூடிய பொறுப்பைப் பெரும்பான்மையாகப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் , கல்வி ஆர்வலர் என்ற அடிப்படையில் மொத்தம் 20 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைத்திருக்கிறது. இந்த கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2010-ல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் பள்ளியின் இறுதி வகுப்பில் பயிலும் மாணவர்களின் பெற்றோரை, மேலாண்மைக் குழு உறுப்பினராக நியமிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் நியமனத்துக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.
- Get link
- X
- Other Apps
பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குக் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் 38 கோரிக்கைகள் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 11-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு 38 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்தக் கோரிக்கைகளில் நிதிசாராத திட்டங்களும் அதிகம் உண்டு. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசீலனை செய்யும்படி சிகரம் சதிஷ் முன்வைத்த 38 கோரிக்கைகள்: * ஆசிரியர்கள் சாபமாகப் பார்க்கும் EMIS ஒரு வரம் என்பதைப் புரிய வைக்க வேண்டும். அதற்கேற்ப அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். * ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு குறைதீர் பிரிவு அறிவிக்க வேண்டும். * பள்ளி நாட்களில் பயிற்சி கூடாது என்பதை அறிவிக்க வேண்டும். * கோடை விடுமுறையில் மட்டுமே கலந்தாய்வு நடைபெறும் என்பதை உறுதி செய்தல் * ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டம் அறிவித்தல் * அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லாப் பொருட்க