தமிழகம் முழுவதும் 26.76 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர் 26.76 லட்சம் மாணவர்கள். தமிழகம் முழுவதும் நடப்பாண்டு 26,76,675 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவுள்ளதாக தமிழக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், 2021 – 2022ஆம் கல்வியாண்டில் நடைபெறும் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளிலிருந்து பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை தற்போது தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4,86,887 பேர், மாணவிகள் 4,68,586 பேர் என மொத்தம் 9,55,474 பேர் எழுதுகின்றனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4,33,684 பேர், மாணவிகள் 4,50,198 பேர் என மொத்தம் 8,83,884 பேர் எழுதுகின்றனர். அதேபோல், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3,98,321 பேர், மாணவிகள் 4,38,996 பேர் என மொத்தம் 8,37,317 பேர் தேர்வு எழுதவுள்ளனர். மூன்று வகுப்புகளையும் சேர்ந்து மாணவர்கள் 13,18,892 பேர், மாணவிகள்...