.jpg)
உயர்நீதிமன்ற தீர்ப்பால் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது! முதல்வர் பரிசீலனை செய்ய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.! உயர்நீதிமன்ற தீப்பால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சிப்பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 RTE Act அடிப்படையில் தமிழ்நாட்டில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET தேர்ச்சி கட்டாயம் என்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அதனால் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1500அரசு உதவிபெறும் ப...