Posts

Showing posts from April 6, 2022
Image
  குரூப் 4 இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.8 முதல் 3 நாள்கள் நடக்கிறது வேப்பேரி பெரியாா் திடலில் இயங்கி வரும் பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் 2022-ஆம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதைத் தொடா்ந்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டாய தமிழ் தாளில் அதிக மதிப்பெண் பெற்று தோச்சி பெறுவது குறித்தும் தோவுகள் குறித்த சந்தேகங்களை தீா்க்கவும், விருப்பப் பாடங்களைத் தோவு செய்யும் முறை, போட்டித் தோவுகளுக்கு எவ்வாறு தங்களைத் தயாா் செய்து கொள்ள வேண்டும் போன்ற மாணவா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான சிறப்புக் கருத்தரங்கம், சிறப்பு வகுப்புகள் ஏப்.8 முதல் 10-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அகாதெமி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இலவசமாக நடைபெறும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியம். முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு 044 2661 8056, 99406 38537 ஆகிய எண்களை அணுகலாம். வேப்பேரியில் உள்ள அகாதெமியை நேரிலும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  நீட் தேர்வு எழுதுவதற்கான நேரத்தை அதிகரித்தது தேசிய தேர்வு முகமை! நீட் தேர்வு எழுதுவதற்கான நேரத்தை தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ளது. இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரமாகும். இந்த தேர்வு எழுதுவதற்கான நேரத்தை தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 3 மணி நேர கால நிர்ணயத்தில் எழுதி முடிக்கப்பட வேண்டிய நீட் தேர்வு இனி 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது. அதாவது 3 மணி நேரம் 20 நிமிடங்கள் தேர்வை எழுதலாம். அதாவது 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் அசாமி, பெங்காலி, ஆங்கிலம். குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மொத்தம் 720 மதிப்ப...
  தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.எட் பட்டதாரிகள் போட்டி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பாதிப்பு. இந்த ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வில் பி.எட் படித்தவர்களும் தாள்-1 எழுத மாநில அரசு அனுமதித்துள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.எட் பட்டதாரிகளும் போட்டியிடுவார்கள் என்பதால் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கவலையடைந்துள்ளனர். மார்ச் 7, 2022 ம் அன்று 2019-ல் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இதுவரை, பி.எட் பட்டதாரிகள் இரண்டாம் நிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய தாள் – 2 எழுத அனுமதிக்கப்பட்டனர். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் TET தாள் – I எழுத தகுதியுடையவர்களாக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது பி.எட் படித்தவர்களும் TET தேர்வு தாள் – I எழுத அனுமதிக்கப்படுவதால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியர்களான பி.எட் படித்தவர்களுடன் போட்டியிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெ...
Image
  10 ம் வகுப்பு தேர்வு அட்டவணை மாற்ற ஆசிரியர் கழகம் கோரிக்கை:பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தல் தேனி:' 'வெப்பக்காற்று அதிகம் வீசுவதால் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை மறுபரிசீலனை செய்து மே 8 க்குள் தேர்வுகளை முடித்து ஜூன் 1 பள்ளிகளை திறக்க வேண்டும்,'' என, தேனியில் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மே 6 ல் - தமிழ், 14 ல் விருப்ப மொழி, 18 ல் ஆங்கிலம், 21 ல் தொழிற்கல்வி, 24 ல் கணிதம், 26 ல் அறிவியல், 30 ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. விருப்ப மொழி தேர்வு நம் மாணவர்களுக்கு இல்லாததால் தமிழ், ஆங்கில தேர்வுகளுக்கு இடையில் ஏழு நாட்கள் உள்ளன. பின் ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 2 நாட்கள் இடைவெளி உள்ளது.சிவக்குமார் கூறியதாவது: கோடை வெப்பம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. முன் எச்சரிக்கையாக முதல் வகுப்பு முதல் 9ம் வகுப்பு தேர்வுகளை ஏப்., 25 க்குள் முடித்து 10 ம் வகுப்புத் தேர்வுகளை ஏப...
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வைத் தவறவிடும் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்.. அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா? தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) முதலாம் ஆண்டு பி.எட். தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதால், 50,000 மாணவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளனர். ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 13, அதற்கு முன் முடிவுகள் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. 'கல்லூரி தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. இறுதித் தேர்வு பிப்ரவரி 16 அன்று முடிந்தது. எனவே, முடிவுகள் வெளிவருவதற்கு கால அவகாசம் எடுக்கும், மேலும் மாணவர்கள் இந்த முறை டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எம் கோவிந்தன் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தொடக்கக் கல்வியில் டிப்ளமோ படித்தவர்கள் (DTEd) அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்க டெட் தாள் I க்கு விண்ணப்பிக்கலாம், பி.எட். இளங்கலை பட்டதாரிகள் 6 முதல் 10 வகுப்...
Image
  குருப்-4 தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும்? இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய அரசுப் பணிகளுக்கான குருப் 4 தேர்வுகள் 2022 ஜூலை 24 அன்று நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 24. அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு தேர்வில் போட்டி மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் குரூப் 4 தேர்வுகளுக்குத் தயாராவதற்கு ஆலோசனைகளை வழங்குகிறார் அனுபவமிக்க போட்டித் தேர்வு பயிற்சியாளரும் குளோபல் விக்கிமாஸ்டருமான ஜி.கோபாலகிருஷ்ணன்: 'பொதுவாகவே அரசுப் பணியில் சேர தற்போது பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதே நேரத்தில் தேர்வுகளை எதிர்கொள்ள சற்று பயப்படுகின்றனர். பயப்படத் தேவையில்லை. தேர்வுகள் எப்படிப்பட்ட தன்மையில் நடத்தப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற ...