![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_AR6C0gB-_NNNszyyaTwCv5XH9Ai9nRpf1s2WurRzUMtKCRa57HdkpOsgUvM09xmA_p5T7_miqbZ6VZtrD6a1HWWGjA1QflD-4nFrjfCSO4IwAe5EYZ1EYC4q1eDbhKBCTug32wZYkU93KRHhpvaGclKrQBvLmHYtoaU_0LsPa7WP3u7B4eOy68nK/s320/n3743144141649173707038554473c9ded01c5abad17152412c8e0e2a6db0af81dfb872a09d13889e111a4c.jpg)
கடந்த 5 நாளில் 7,382 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு 1.44 லட்சம் பேர் விண்ணப்பம்! டிஎன்பி.எஸ்.சி 7,382 காலி பணி இடங்களுக்கு குரூப்-4 தேர்வை டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ள நிலையில், இந்த தேர்வுக்கு 1.44 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்கள் மற்றும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில், குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் 30ம் தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வரு...