Posts

Showing posts from April 4, 2022
Image
  கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் விவரங்கள்! அரசு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயார் செய்ய ஏதுவாக 20.03.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது . அத்துடன் ஊக்க உரைகள் , முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் இதன் மறு ஒளிபரப்பு பிற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் தனியார் தொலைக்காட்சியின் அலைவரிசை எண் குறித்த விவரங்கள் :
Image
  மாணவர் சேர்கைக்கு லஞ்சம்... கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை அடுத்த நெற்குன்றம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த ராஜேந்திரன், கடந்த 2018ம் ஆண்டு தனது மகனை சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். அந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க பள்ளியின் முதல்வராக இருந்த ஆனந்தன் என்பவர் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பள்ளியில் சேர்க்கும்போது ஒரு லட்சம் ரூபாயும், 15 நாட்களுக்கு பின் மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை வழங்கவும் முதல்வர் கோரி உள்ளார். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், சி.பி.ஐ. அதிகாரிகள், பள்ளி முதல்வர் ஆனந்தனை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன், பள்ளி முதல்வர் ஆனந்தன் மீதான குற்றச்...
Image
  பல்வேறு TNPSC பணிக்கு.. இன்று வெளியான புதிய அறிவிப்பு..!!!! பொறியியல் பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி என்று வெளியிட்டுள்ளது. அதன்படி தானியங்கி பொறியாளர், இளநிலை ஆய்வாளர், உதவி பொறியாளர், உதவி வேளாண்மை பொறியாளர், உதவி இயக்குனர், தொழிற் பாதுகாப்பு துறை, உதவி பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 307 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 03.05.2022. மேலும் இந்த பணிகளுக்கான சம்பள 37 ஆயிரத்து 700 முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 500 வரை. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image
  TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு...வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!!! தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டிருந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை கடந்த 18-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பதிவுசெய்வதில் இணையத்தில் சர்வர் வேகம் குறைவாக இருப்பதாக புகார்கள் பெறப்பட்டது. இதனால் தங்களுக்கு மேலும் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் டி ஆர் பி யின் தலைவர் லதா முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஈமெயில் வாயிலாக பெறப்பட்டுள்ளது. அதற்குரிய பதில்கள...
  பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு. SSLC May 2022 Science practical date and batch
Image
  வெயில் தாங்கல.. பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்! - முதல்வருக்கு கோரிக்கை! தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக மே மாதத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும் நிலையில் இந்த ஆண்டில் மே மாதத்தில்தான் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஆனால் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளிகள் செயல்படும் நேரத்தை காலை 7.30 மணியிலிருந்து 12.30 மணி வரை என மாற்றியமைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Image
  TNPSC : மே - 2022 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியீடு Tamil Nadu Public Service Commission has introduced One Time Registration from the Departmental Examinations December - 2019 . Hence , the candidates are required to furnish their particulars in Departmental One Time Registration before applying . Aadhaar Number details shall be linked with the Departmental One Time Registration , mandatorily . If there is any change with regard to details entered in the One Time Registration , such as name , initial , father's name , date of birth , working district , etc. , the same shall be updated in the One Time Registration before applying for Departmental Examinations - May 2022. After submitting the application , any subsequent claim , with regard to change of test code / centre , corrections in name , father's name , age , date of birth , etc. , will not be entertained . Hence , the candidates are instructed to submit the applications with utmost Care.. Candidates should mode...
Image
  10 ,11மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஆணையர் நந்தகுமார் ஆலோசனை!! 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் 10, 11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பள்ளி கல்வித்துறையால் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. அத்துடன் 12ஆம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 10, ...
Image
  444 சப்-இன்ஸ்பெக்டர்  பணியிடங்கள்.. இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு.. உடனே அப்ளை பண்ணுங்க.!!!! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த பணியிடங்கள்: 444 வயதுவரம்பு: 20- 30 கல்வித்தகுதி: டிகிரி சம்பளம்: 36,900-1,16,600 விண்ணப்பிக்க கடைசி தேதி: 7.4.2022 இதற்கான எழுத்து தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.