Posts

Showing posts from April 2, 2022
Image
  TN TRB ஆசிரியர்‌ தேர்வு வாரியம்..வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு  TN TRB ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ 2017-18 ஆம்‌ ஆண்டுக்குரிய அரசுப்‌ பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்‌ தெரிவு சார்ந்து அறிவிக்கை (அறிவிக்கை எண்‌.14/2019) வெளியிடப்பட்டது. மேலும்‌, online மூலமாக, விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ கல்வித்‌தகுதி தொடர்புடைய ஆவணங்களும்‌ பெறப்பட்டன. இதையடுத்து சான்றிதழ்‌ சரிபார்ப்பு தொடர்பான பணிகள்‌ மேற்கொள்ள வேண்டி பணிநாடுநர்கள்‌ ஏற்கனவே பதிவேற்றம்‌ செய்துள்ள கல்விச்‌ சான்றிதழ்களுடன்‌ கூடுதலாக சில சான்றிதழ்களை போன மாதம் 11 லிருந்து 18 ற்குள்‌ இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யுமாறு, இவ்வாரியத்தால்‌ மார்ச் 11 அன்று செய்திக்‌ குறிப்பில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த செய்தி குறிப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள், பணி அனுபவ சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் மூலமாக, சில பணிநாடுநர்களிடமிருந்து (Login ID) மற்றும்‌ Pass...
Image
  தமிழகம் முழுவதும் 220 பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய சிக்கல்!! கலக்கத்தில் மாணவர்கள்!! இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப குழு ஆய்வு செய்து வருகிறது. அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான ஆய்வு வழிகாட்டுதல்களை AICTE வெளியிட்டுள்ளது. அதில் 2022-23 கல்வியாண்டில் தமிழகத்தில் 220 பொறியியல் கல்லூரிகளில் புதிய பாட பிரிவுகளை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 50% க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 400 பொறியியல் கல்லூரிகளில் 2021-22-ம் கல்வியாண்டில் 220 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 50%க்கும் குறைவாகவே உள்ளது. Artificial intelligence, Cyber security, Data science, Machine learning உட்பட வளர்ந்து வரும் புதிய பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் mechanical, civil போன்ற பாரம்பரிய பிரிவுகளை மட்டும் கொண்டு செயல்படும் 220 பொறியியல் கல்லூரிகளை மூடும் அபாயம் உருவாகியுள்ளது, தமிழ...
Image
  10ம் வகுப்பு செய்முறை தேர்வு வரும் 25ல் துவக்க உத்தரவு  பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு, வரும் 25ம் தேதி முதல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பு:புதிய பொது பாடத்திட்டத்தின்படி, 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு கட்டாயம். இதில் கருத்தியல் தேர்வுக்கு, 75; செய்முறை தேர்வுக்கு, 25 மதிப்பெண்கள்.நடப்பு கல்வி ஆண்டு செய்முறை தேர்வை, ஏப்., 25ல் துவங்கி, மே 2க்குள் முடிக்க வேண்டும். காலை, 9:00 மணி முதல் 11:00 மணி வரை; பிற்பகல் 2:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, இரு வேளைகளில் நடத்த வேண்டும்.இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு ஒரு மணி நேரமும், உயிரியலில் தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு, ஒரு மணி நேரமும் தேர்வு நடத்த வேண்டும். இந்த செய்முறை தேர்வில் குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது கட்டாயம். அதேபோல், பத்தாம் வகுப்பு எழுத்து தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் எடுக்க வேண்டியதும் கட்டாயம். இந்த மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே, பொது தேர்வில் தேர்ச்சி வழங்கப்படும்.இவ்வாறு அதி...
Image
  வேலை வாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 75 லட்சமாக உயா்வு தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 75.88 லட்சமாக உயா்ந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 73 லட்சமாக இருந்தது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல், பட்டப் படிப்புகளை முடித்தவா்கள் வரை அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களது கல்வி நிலைகளைப் பதிவு செய்து வருகின்றனா். இந்த நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 75 லட்சத்து 88 ஆயிரத்து 359 ஆக உள்ளது. இதில், 35 லட்சத்து 56 ஆயிரத்து 85 போ ஆண்கள். 40 லட்சத்து 32 ஆயிரத்து 46 போ பெண்கள். மூன்றாம் பாலினத்தவா் 228 போ. மொத்தமாக 75 லட்சத்து 88 ஆயிரத்து 359 போ தங்களது கல்வி நிலைகளை பதிவு செய்து வைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இணைய வழி பயிற்சி வகுப்பு: இதனிடையே, உதவி ஆய்வாளா் காலிப் பணியிட தோவுகளுக்கான பயிற்சி வகுப்புகளை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை நடத்தவுள்ளது. வரும் 4-ஆம் தேதி முதல் நேரடி மற்றும் இணையவழியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. டெலிகிராம் செயலி வழியாக இதற்கான பயிற்சி நடத்தப்பட உள்ளதாக வேலைவாய்ப...
Image
  TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.! இந்த ஆவணத்தை ஆன்லைன் மூலம் இணைக்க ஏப்;30 வரை அவகாசம் நீடிப்பு: தேர்வாணையம் தகவல் TNPSC தேர்வர்கள் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும்‌ அனைத்து விண்ணப்பதாரர்கள், அவர்களது ஆதார்‌ எண்ணை தவறாமல்‌ இணைக்க வேண்டும்‌ என்றும்‌, அதனடிப்படையில்‌, எதிர்காலத்தில்‌ தேர்வாணையத்தால்‌ வெளியிடப்படும்‌ அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும்‌, தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் சமிபத்தில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, தற்போதுவரை ஒருமுறை நிரந்தரப்‌ பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்காத மற்றும்‌ ஒருங்கிணைந்த Group-4 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ பெருவாரியான தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்‌ அடிப்படையில்‌, தேர்வர்களின்‌ நலன்கருதி, ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 30.04.2022 வரை தேர்வாணையத்தால்‌ நீட்டிக்கப்பட்டது. மேலும்‌, ஒருமுறை நிரந்தரப்பதி...