Posts

Showing posts from April 1, 2022
Image
  போட்டித்தேர்வு முறையை கைவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சீமான் வலியுறுத்தல்.! போட்டித்தேர்வு முறையை கைவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வ வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கயில், தமிழ் நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு மூலம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்ற அரசின் அறிவிப்பு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் உடற்கல்வி பயிற்றுநர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு அனுபவம் மற்றும் உடல் திறன் சோதிக்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனத்தை மேற்கொள்ளாமல், விளையாட்டு ஆசிரியர் பணி நியமனத்திற்கும் போட்டித்தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசின் முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தி...
Image
  TNPSC Group 4: குரூப்-4 தேர்வில் பதவி வாரியாக காலி பணியிடங்கள் விபரம்! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா.பாலசந்திரன் வெளியிட்டார். அதன்படி, 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன...
Image
  NEET தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தேர்வு முகமையால் இந்திய அளவில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. அதே சமயம் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  2022-23 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்துள்ளது. அதன்படி ஏப். 2ம் தேதி (நாளை) முதல் நீட் தேர்வுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என்றும் மே 7ம் தேதியுடன் முன்பதிவு காலம் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்லைன் விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தம் மேற்கொள்ள 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். மேலும் நடப்பு ...