Posts

Showing posts from March 31, 2022
Image
  குரூப் 4 தேர்வில் தமிழ் மொழியில் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்? கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பண்டக காப்பாளர் போன்ற பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப் -4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை இரு நாள்களுக்கு முன்பு தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இதற்கான தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வுக்கான பணி வாரியான காலியிடங்கள் விவரம்: மொத்த காலியிடங்கள்: 7301 1. கிராம நிர்வாக அலுவலர் - 274 2. இளநிலை உதவியாளர் - 3590 + 3 3. இளநிலை உதவியாளர்(பிணையம்) - 88 4. வரித் தண்டலர், நிலை-I - 50 5. தட்டச்சர் - 2089 + 39 சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900 6 சுருக்கெழுக்கு தட்டச்சர் (நிலை-III) - 885 +39 சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900 7. பண்டகக் காப்பாளர் (தமிழக்ம் விருந்தினர் இல்லம் உதகமண்டலம்) - 01 சம்பளம்: மாதம் ரூ. 16,500 - 66,000 8. இளநிலை உதவியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட
Image
  TANCET நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம் டான்செட் தேர்வு எழுத விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வரும் 2022 -23ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ ,எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று சொல்லப்படும் அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டான்செட் தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  அதேசமயம் தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் பிஇ ,பிடெக் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது . வருகிற 15-ஆம் தேதி 15 தேதிகளில் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்காக https://tanct.annauniv.edu/tancet என்ற இணையதளத்தின் மூலம் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக பொது மற்றும் எம்பிசி, பிசி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ் டி
Image
  திண்டிவனம் அடுத்த செ.கொத்தமங்கலம் ஊராட்சி   அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை திண்டிவனம் அடுத்த செ.கொத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. செ. கொத்தமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பிலிருந்து 5 வகுப்பு வரை 63 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.இப்பள்ளியில், ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என இரண்டு பேர் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இருந்த ஒரு ஆசிரியரையும் கடந்த 28ம் தேதி வேறு பள்ளிக்கு இட மாற்றம் செய்துள்ளனர்.தற்போது தலைமையாசிரியர் மட்டும் பணிபுரிந்து வருகிறார். இதனால், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளியை குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கப்படாததால் தினமும், மாணவர்கள் வெளியே காத்திருக்கும் அவலம் உள்ளது.இதனால், அப்பள்ளிக்கு, கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, செ.கொத்த
Image
  10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தீவிரம் : அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசுத் தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மே முதல் வாரத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு , 11 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், மே 4ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண் விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டுமென தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவிட்டுள்ளார். அன்பில் மகேஷ் ஆலோசனை: இதனிடையே, ஏப்ரல் 4, 5 தேதிகளில் சென்னையில் நடைபெறும் முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எழுதப்படாத வெள்ளை வி
Image
  NEET Exam Date : நாடு முழுவதும் ஜூலை 17-ந் தேதி நீட் நுழைவுத்தேர்வு மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு மத்திய அரசால் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் ஜூலை மாதம் 17-ந் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு நாளை முதல் வரும் மே 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Image
 'குரூப் 4' தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவக்கம் குரூப் 4' தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியது. வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர் உட்பட, ஏழு வகை பதவிகளில், 7,301 காலியிடங்களை நிரப்ப, ஜூலை 24ல், குரூப் 4 தேர்வு நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' வழி விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம்.இந்த தேர்வில் பங்கேற்க, வரும் ஜூலை 1ல் குறைந்த பட்சம், 21 வயது முடிந்திருக்க வேண்டும்; 60 வயது வயதுள்ளவர்கள் வரை எழுதலாம். கல்வி தகுதியை பொறுத்தவரை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இளநிலை உதவியாளர் பணிக்கு, பிளஸ் 2; மற்ற பதவிகளுக்கு குறைந்தபட்சம், 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் பணிக்கு, தட்டச்சு முதுநிலையும்; சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து முதுநிலையும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.எழுத்து தேர்வு முடிவுகள், அக்டோபரில் வெளியிடப்படும். சான்றிதழ் பதிவேற்றம் அக்டோபரிலும், சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங், நவம்பரிலும் நடைபெறும். கூடுதல் விபரங்களை, www.t