12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப். 25 முதல் மே 2 வரை நடைபெறும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுக்காக வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டிருக்கிறது. மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
Posts
Showing posts from March 30, 2022
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் குரூப் 4 தேர்வுக்கு முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலக வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 7 ஆயிரத்து 381 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.இத்தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அவர் கூறினார். முதன்முறையாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியங்களில் உள்ள 163 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதில் 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவினர் மூலம் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார். குரூப் 4 தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மூன்று மணி நேரம் நடைபெறும் எனவும், இந்தத் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும் எனவும், இதில் 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாவும், 75 கேள்விகள் பொது அறிவு தொடர்புடையதாகவும் இருக்கும் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். குரூப் 4 தேர்வு முடிவை அ
- Get link
- X
- Other Apps
இனி பி.இ படிப்புகளில் சேர கணிதம்,வேதியியல் கட்டாயமில்லை - AICTE முக்கிய அறிவிப்பு! பொறியியல் படிப்புகளில் சேர இனி 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என AICTE அறிவிப்பு. 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE) வெளியிட்டுள்ளது. அதன்படி,குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE)அறிவித்துள்ளது. மேலும்,பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல எனவும்,கணினி அறிவியல்,மின்& மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. குறிப்பாக,கட்டிடக்கலை,பயோடெக்னாலஜி மற்றும் பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட மூன்றில் ஒரு பங்கு பொறியியல் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற தேவையில்லை என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்குவது அவசியம்:முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புடன் உயிர் பாதுகாப்பு வழங்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்,'' என, தேனி பொது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் அன்பழகன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சில நாட்களுக்கு முன் 10ம் வகுப்பு மாணவர் கத்தியுடன் பள்ளியில் தகராறு செய்துள்ளார். தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகம் எடுத்து வராமல் இருந்த மாணவர் ஆசிரியரை தாக்கியது, மாணவர்கள் சிலர் ஆசிரியர்களை கேலி செய்யும் அவலமும் நடந்தது. இது தேனி ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்குவது அவசியம். இதுபோன்ற சம்பவங்களால் மாநிலத்தில் உள்ள ஆசிரியர்கள் வேதனையில் உள்ளோம் என்றார்.
- Get link
- X
- Other Apps
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு.. இன்னும் 13 நாட்கள் மட்டுமே இருக்கு.. மிக முக்கிய அறிவிப்பு..!!!!! தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இப்போது கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி-கல்லூரி மற்றும் அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய "டெட்" தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த டெட் தேர்வு தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி வருடந்தோறும் நடத்தப்பட வேண்டும். அதன்படி 2022-ஆம் வருடத்துக்கான "டெட்" தேர்வு தொடர்பான அறிவிப்பை TRB கடந்த 7ஆம் தேதி வெளியிட்டது. அத்துடன் இத்தேர்வுக்கு மார்ச் 14-ஏப்ரல் 13 வரை