
ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ.. ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஜிப்மர்) நிறுவனத்தில் 2022-ஆம் ஆண்டில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நர்சிங் அதிகாரி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர் (சிவில்), இளநிலை பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), தொழில்நுட்ப உதவியாளர் - என்டிடிசி, டெண்டல் மெக்கானிக், மயக்கவியல் தொழில்நுட்பவியலார், ஸ்டெனோகிராபர் கிரேட் 2 மற்றும் இளநிலை நிர்வாக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு நியமனம் நடைபெற இருக்கிறது. நர்சிங் அதிகாரி பணியிடத்துக்கு, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2022 மார்ச் 30-ஆம் தேதிக்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணைய முகவரி www.jipmer.edu.in ஆகும். குரூப் பி மற்றும் குரூப் சி வகை பணிகளில் 143 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் நபர்களை தகுதி அடிப்படையில் வரையறை செய்து, அவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...