Posts

Showing posts from March 27, 2022
Image
  ஏப்., 18ல் வேளாண் முதலாண்டு வகுப்பு துவக்கம் கோவை:முதலாம் ஆண்டு பி.எஸ்சி., வேளாண் மாணவர்களுக்கு, ஏப்., 18 முதல் வகுப்பு துவங்க உள்ளதாக வேளாண் பல்கலை அறிவித்துள்ளது.வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்புக் கல்லுாரிகளில், 12 இளநிலை பட்டப்படிப்புகளில், 4,670மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, பிப்., 23ல் துவங்கியது. தொடர்ந்து கவுன்சிலிங் நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் கவுன்சிலிங் முடிக்க பல்கலை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, உறுப்புமற்றும் இணைப்பு கல்லுாரிகளை, ஏப்., 18ல் துவங்க பல்கலை முடிவு செய்துள்ளதாக, வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
Image
  பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை உத்தரவு!! தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஜனவரி 31ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் படிப்படியாக தளர்வுகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி மாணவர்களின் கல்வி நலன் கருதி கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடத்திற்கான காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் இருக்கும் உபரி ஆசிரியர் பணியிடத்திற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு பணி இடமாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பணி ...
Image
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக பலர் பணிபுரிந்து வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானதே எனவும் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பணி நிரவல் ஆணை பெற்ற உபரிபட்டதாரி ஆசிரியர்கள், அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. அதன்பின் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அதே பள்ளியில் பணிபுரிந்தால் முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தலைமை ஆசிரியர்களும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Image
  தட்டச்சு தேர்வு முறையில் புதிய மாற்றம்.. மாணவ-மாணவிகள் கடும் அவதி..!!!! தட்டச்சு தேர்வு முறையில் அரசு சில மாற்றங்கள் செய்துள்ளது. தமிழகத்தில் தொழில்நுட்ப இயக்குனரகம் தட்டச்சுத் தேர்வை நடத்துகிறது.. இந்த தட்டச்சு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கணினி வழி தேர்விலும் வெற்றி பெற்ற பிறகு அரசு நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த தட்டச்சு தேர்வில் அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குன்னூரில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முதலில் வேக தட்டச்சு முறையும், இரண்டாவதாக கடிதம் மற்றும் ஸ்டேட்மெண்ட் எழுதும் முறையும் வழக்கத்தில் இருந்தது. ஆனால் தற்போது நடந்த தேர்வில் முதலில் ஸ்டேட்மெண்ட் மற்றும் கடிதம் எழுதுதல் இருந்தது. இதன் காரணமாக உரிய நேரத்தில் மாணவர்கள் தேர்வை எழுத முடியவில்லை. எனவே பழைய தட்டச்சு முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென மாணவ-மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Image
  TANCET நுழைவுத் தேர்வு.. மார்ச் 30 முதல் ஏப்ரல் 18 வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!! வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E, M.Tech. M.plan, M.Arch, படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வுக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் B.E, B.Tech, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் tancet.annauniv.edu/tancet என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
Image
மொத்தம் 2,774 பணியிடங்கள் 5 மாதங்களுக்கு.! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 பணியிடங்களை 5 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியதாவது; அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்பச் சிறிது காலம் ஆகும். இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் 11-ம் மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலன், பொதுத்தேர்வுக்குத் தயார் செய்தல், தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றைக் கருதி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஏற்பாடாக நியமித்துக் கொள்ளலாம். தற்போது அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2...
Image
  மாணவர்களிடம் தலைத்தூக்கும் வன்முறை - குழு அமைக்க வலியுறுத்தும் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் தற்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகளை குறைப்பதற்காக நன்னடத்தை பாடத்தை மீண்டும் கற்பிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் சமீபத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் கலாட்டா செய்தது, ஆசிரியரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம், பள்ளிகளில் ஆசிரியர்களிடம் வன்முறையாக நடந்துக் கொள்வது போன்றவை அதிகரித்து வருகிறது. மேலும், மாணவர்களை அடித்தாலோ பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் நேரில் பிரச்சனை செய்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, "தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் ஒழுக்க குறைபாடான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் பேருந்துகளில் ஒழுக்க குறைவான செயல்பாடுகளில் ஈடுபடுவது, வழிபறிகளில் ஈடுபடுவது, மது அருந்துவது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர...