Posts

Showing posts from March 25, 2022
Image
  முதுகலை பட்டதாரி போட்டித்தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ள பத்திரிக்கை செய்தி
Image
  2774 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 பணியிடங்களை 5 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகும். எனவே இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலன்கருதி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரையில் ஐந்து மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும். அ
Image
  M.Phil படிப்பு முழுமையாக நீக்கம்., ஆனால் இது செல்லும் - பல்கலைக்கழக மானியக்குழு வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இருந்து முழுவதும் நீக்கப்படுகிறது M.Phil., படிப்பு என யுஜிசி அறிவிப்பு. வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கப்படுகிறது என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த M.Phil பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி (UGC) தெரிவித்துள்ளது. கற்பித்தல் பணிக்கு M.Phil., தகுதியானது இல்லை என்பதால், M.Phil., படித்திருந்தாலும் அதை ஒரு தகுதியாக குறிப்பிட முடியாது என குறிப்பிட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ்வரும் கல்லூரிகளிலும் M.Phil படிப்பு கைவிடப்படுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே M.Phil படிப்பில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம் எனவும் கூறப்பட்டது. இதனிடையே, முதுநிலை கல்வி முடிக்காமல் இளநிலை பட்டப்படிப்பு முடிந்ததும், நேரடியாக பிஎச்.டி.படிப்பில் சேரும் வகையில் புதிய இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்ய உள்ளது. முன்பு பிஎச்.டி., படிக்க வேண்டும் என்றால் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஆனால
Image
  சான்றிதழ் பதிவேற்றுவதில் சிக்கல்: டி.ஆர்.பி., தேர்வர்கள் பரிதவிப்பு ;டி.ஆர்.பி., இணையதளத்தில் உள்ள சிக்கல்களால், அனுபவ சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாத சூழல் எழுந்துள்ளதாக, தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2021 டிச., மாதம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், விரிவுரையாளர்களாக பணியில் சேர தேர்வுகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு; தகுதி சான்றிதழ் அனைத்தும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலஅவகாசம் இன்றுடன் நிறைவுபெறுகிறது.இச்சூழலில், தேர்வர்கள் பலர் அனுபவ சான்றிதழ் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை தொடர்வதாக, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தேர்வர் சங்கர் கூறுகையில், ''அனுபவ சான்றிதழ் பெற கல்லுாரிகளில் லஞ்சம் கேட்கின்றனர். சில கல்லுாரிகள் அனுபவச்சான்றிதழ் தர மறுக்கின்றனர். இத்தேர்வு நடைமுறையின் படி, பணி அனுபவம் உள்ளவர்களுக்கு இரண்டு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும். அதற்கு, இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். நான் பணிபுரியும் கல்லுாரியில் சான்றிதழ் வழங்க பணம் கேட்பதால், அந்த இரண்டு மதிப்பெண் வேண்டாம் என கருதி விண்ணப்பிக்க முயற்சி ச