டி.என்.பி.எஸ்.சி குரூப் 2: 5000 பணிகளுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம்! டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ பணிகளுக்கு 5 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 11 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் டி ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய காலஅவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வு தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த பணிக்கு மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பம் சத்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இந்த பதினோரு லட்சம் பேர்களில் சுமார் 1 லட்சம் பேரும் கடுமையாக தீவிரமாக பயிற்சி எடுத்தாலும் அதில் 95 ஆயிரம் பேர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Posts
Showing posts from March 24, 2022
- Get link
- X
- Other Apps
குரூப் 2 தேர்வுக்கு குவிந்த விண்ணப்பங்கள்...5000+ இடங்களுக்கு எத்தனை பேர் போட்டி தெரியுமா? தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 5,413 இடங்களுக்கு, 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டைவிட 60 சதவீதம் அதிகமாக விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5,413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23-ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு பிப் 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பிற்பகல் வரை 10,52,839 பேர் விண்ணப்பம் செய்த நிலையில், இறுதி எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டிவிட்டதாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் ...
- Get link
- X
- Other Apps
ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித் தொகை: நிதியமைச்சர் தகவல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் பொருந்தும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2022-23 பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று நிதித்துறை கோரிக்கைகளுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அப்போது, பேசிய அவர், "அரசுப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று ஏற்கெனவே 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்து. இந்தத் திட்டம் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் பொருந்தும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
- Get link
- X
- Other Apps
10, 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!விண்ணப்பிக்க தவறியவர்கள் மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா குறைந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனையடுத்து பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நேரடியாக நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி 10,11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு :மே 6 ம் தேதியும், 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ம் தேதியும் தொடங்குகிறது. 10,11,12 ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ம் தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு :மே 6 ம் தேதி முதல் மே 30 ம் தேதி வரை நடைபெறுகிறது. 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு :மே 9 ம் தேதி முத...
- Get link
- X
- Other Apps
இல்லம் தேடி கல்வி திட்டம் ஏன் - அமைச்சர் அன்பில்மகேஷ் விளக்கம் !! ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற தனியார் தொண்டு அமைப்பு சார்பாக இந்திய இளம் விஞ்ஞானி பரிசளிப்பு விழா GRO SAVE ஆஃப் வெளியீட்டு விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இளம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கி கவிரவித்தார். பின்னர் உரையாற்றிய அவர், பள்ளிக்கல்வித்துறையை பொருத்தவரை சீரான ஒரே மாதிரியான கல்வி எல்லோருக்கும் சேர வேண்டும் எனவும், கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாததால் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். இதனை சரி செய்யவே இல்லம் தேடி கல்வி உருவாக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஆர்வத்தை ஏற்படுத்தப்படும் என்றும், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு நாட்டின் வளர்ச்சியாக பார்க்கிறோம் என்றும் கூறினார்
- Get link
- X
- Other Apps
TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கவனத்திற்கு; புகார் குறித்து தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! TET – விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை TRB அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) தாள்-1 மற்றும் தாள்-II எழுதுவதற்கான அறிவிப்பு 07.03.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை சார்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை .9444630028, 9444630068 கைபேசி எண்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுத்து மூலமாக தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினால் trbtetgrievance2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வு, தாள் - I மற்றும் தாள் - II தமிழ்நாட்டில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து. இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம்...
- Get link
- X
- Other Apps
நிரப்பப்படாத அங்கன்வாடி காலிபணியிடங்கள் சிவகங்கை, : அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் 7 ஆயிரம் பணியிடங்கள் கூடுதல் பணிச்சுமையுடன் உள்ளனர். பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாததால் ஏமாற்றம் அளிப்பதாக ஐ.சி.டி.எஸ்.,ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.ஐ.சி.டி.எஸ்., ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ராணி, பொதுச்செயலாளர் வாசுகி தெரிவித்ததாவது: ஐ.சி.டி.எஸ்., திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களின் 38 ஆண்டுகால வாழ்வாதார கோரிக்கையான அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். 2021 ல் ஜன., முதல் மார்ச் வரை 3 கட்ட போராட்டங்கள் நடத்தினோம். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த ஓய்வூதிய தொகை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவார்கள் என உறுதியளித்திருந்தார். தற்போதைய பட்ஜெட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை.தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. கூடுதல் பணிச்சுமையில் ப...
- Get link
- X
- Other Apps
கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு கல்வித் தொலைக்காட்சியின் மூலம், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட அறிக்கை: கல்வித் தொலைக்காட்சி மூலம் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வழங்குவது குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார். இதற்கான அரசாணைகள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கடந்த ஜனவரி 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யங்களில் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப் புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில்...
- Get link
- X
- Other Apps
குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு என சமூக வலைதளங்களில் பரவி வருவதை யாரும் நம்ப வேண்டாம் - டி.என்.பி.எஸ்.சி வேண்டுகோள் குருப் -4 தேர்வுக்கான (GROUP 4) அறிவிப்பு என சமூக வலைதளங்களில் பரவி வருவதை யாரும் நம்ப வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. இந்தநிலையில், குரூப் -4 தேர்வு குறித்த தவறான அறிவிப்பு இணையத்தில் பரவிவந்தது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ளவேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது. தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி -4-க்கான அறிவிக்...