Posts

Showing posts from March 23, 2022
Image
  மோட்டார் வாகன ஆய்வாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வழக்கு ரத்து தமிழ்நாடு மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வில், அனைத்து விண்ணப்பதாரர்களின் எழுத்துத் தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், 226 பேர் நேர்முகத்தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பட்டியலை எதிர்த்தும், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை வெளியிடக் கோரியும் 54 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எழுத்துத்தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் முடிவுகளையும் வெளியிட்டு, அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியலை தயாரிக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாத விண்ணப்பதாரர்கள் தவிர, மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கடந்தாண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்
  கலை அறிவியல் படிப்புகளில் நுழைவுத் தேர்வு முறை! தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என அமைச்சர் பொன்முடி விளக்கம்.! கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்தும் முறையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாமக உதுபினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மத்திய பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் பாடங்களில் சேர நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் தமிழகத்தில் கலை அறிவியல் படிப்புகளில் நுழைவு தேர்வை எந்தவித்திலும் அனுமதிக்க மாட்டோம் என்றும், முதலமைச்சர் கடுமையாக எதிர்ப்பார் என்றும் தெரிவித்தார்
Image
  TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க முடியாது - அமைச்சர் பிடிஆர் திட்டவட்டம் தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam), டி.என்.பி.எஸ் சி - ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு (TNPSC Group 2 Exam) விண்ணப்பிக்க இன்று கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Minister Palanivel Thiagarajan), ஒரே விண்ணப்பதாரர் 2 முறை விண்ணப்பிக்க கூடாது என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது 2020-இல் கொண்டு வரப்பட்டது. எனவே விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீடிக்க முடியாது. இதுவரை 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வேறு வகையில் சரி செய்ய முடியுமா என்று தேர்வு ஆணையத்தில் ஆலோசித்து அடுத்த தேர்வுக்கு முன்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா
Image
  குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - இதுவரை 10,52,839 பேர் விண்ணப்பம்..! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை 10,52,839 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகியப் பணியிடங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 413 இடங்களுக்கு, 10 லட்சத்து 52 ஆயிரத்து 839 பேர் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 60 % பேர் அதிகமாக விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குரூப் 2ஏ பணியிடங்களில் 5ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பைப் பிப். 23 ஆம்தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் இந்தத் தேர்வுகளுக்கு பிப். 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் 23ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையத
  வினாத்தாள் லீக் ஆகாமல் இருக்க கல்வித்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை!   பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 28ம் தேதி இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு துவங்க உள்ளது. இதில், வினாத்தாள் வெளியாவதை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் வீட்டில் இருந்த மாணவர்களை பொது தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், திருப்புதல் தேர்வுகளை நடத்த, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 1ல் முதற்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள், முன் கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியாகின.  இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அலுவலர்கள், போலீசில் புகார் அளித்தனர். தி.மலை மாவட்டத்தில் வினாத்தாள் லீக் ஆனது தெரியவந்தது. இரண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.  இந்நிலையில், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 28ம் தேதி துவங்க உள்ளது. இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளன.
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்.. காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாளாக உள்ள நிலையில், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது. நடப்பாண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கியது. இன்று ( மார்ச் 23-ம் தேதி ) விண்ணப்பிக்கக கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யமுடியவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். இன்றே கடைசி நாள் என்பதால் பல தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமால் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இத
Image
 TN PSC தேர்வர்கள் இந்த ஆவணத்தை இணைக்க தவறினால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.! உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்  TNPSC தேர்வர்கள் ஒருமுறை நிரந்தரப்பதிவு (OTR) கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. One Time Registration கணக்கு வைத்திருக்கும்‌ அனைத்து விண்ணப்பதாரர்களும்‌, தங்களது ஆதார்‌ எண்ணை ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ தவறாமல்‌ இணைக்க வேண்டும்‌ என்றும்‌, அதனடிப்படையில்‌, எதிர்காலத்தில்‌ தேர்வாணையத்தால்‌ வெளியிடப்படும்‌ அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும்‌, தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில்‌, ஒருங்கிணைந்த Group II, Group IIA தேர்விற்கு, இணையவழியில்‌ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்‌ ஆகும்‌. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்‌, தங்களது ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும்‌.  அவ்வாறு, ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைப்பதற்கு, 01.02.2022 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி, இன்றே கடைசி நாள்‌ 28.02.2022 ஆகும்‌. எனவே‌, இன்றைக்குள்
Image
  புதுச்சேரி தொடக்கப் பள்ளிகளில் 164 ஆசிரியர் பணியிடம் காலி அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 164 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி கவர்னரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது.புதுச்சேரி பூர்வீக பழங்குடி இருளர் நலச் சங்க செயலாளர் அரங்கநாதன் கவர்னரிடம் கொடுத்துள்ள மனு: புதுச்சேரியில் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. சமீபத்தில் 74 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு 425 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு 7 ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருந்து வருகிறது.எனவே, தற்போதைய நிலையில் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 164 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
Image
 ' குரூப் - 2' தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி. மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. குரூப் - 2, 2 ஏ' பணிகளில் அடங்கிய, 5,529 பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று முடிகிறது. விண்ணப்ப பதிவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில், குரூப் - 2 பதவிகளில் 116; குரூப் - 2 ஏ பதவிகளில் 5,413 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், மே 21ல் முதல்நிலை தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 23ல் துவங்கியது. பட்டப்படிப்பு முடித்த அனைவரும், குரூப் - 2, 2 ஏ பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.இந்நிலையில், புதிதாக விண்ணப்பிக்கவும், விண்ணப்ப விபரங்களை திருத்தவும், கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.