
Social Welfare Workers: மக்கள் நலப் பணியாளர்களுக்கு எப்போது பணி கிடைக்கும்? - அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! 2011ம் ஆண்டில் 13500 மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது. அதை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவிற்கு தடை பெற்றது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பாக பேசப்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மக்கள் நல பணியாளர்களை நியமித்தது திமுக அரசு. ஆனால் அதன்பின்னர் வந்த அதிமுக அரசு அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பியது. அவர்கள் நீதிமன்றம் சென்று மீண்டும் வேலை தரவேண்டும் என்ற உத்தரவை பெற்ற போது அதை எதிர்த்து அதிமுக அரசு உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு மக்கள் நல பணிய...