மாணவ மாணவியர் கடைப்பிடிக்க வேண்டிய உத்தரவுகள்
Posts
Showing posts from March 21, 2022
- Get link
- X
- Other Apps
மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் : யூஜிசி மத்திய பலகலைக்கழகங்கள் அனைத்திலும் இளநிலை படிப்புக்களில் சேர பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என யூஜிசி அறிவித்துள்ளது. மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்க்ளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலம் இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதை போல் மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புக்களில் சேர 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜீசி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலமே 2022-23ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் இனி இளநிலை மாணவர் சேர்க்கைக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு முடிவுகளை கொண்டு இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த மாற்றம் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் முறையில் செய்யப்பட்டுள்ளத...
- Get link
- X
- Other Apps
புதுச்சேரி காவலர் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! புதுச்சேரி காவல்துறையில் நிரப்பப்படாமல் இருந்த 390 பணியிடங்களுக்கு உடல் தகுதித் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த உடல் தகுதி தேர்வில் 2 ஆயிரத்து 644 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தகுதி பெற்றவர்களுக்கு புதுச்சேரியில் உள்ள 5 மையங்களில் கடந்த சனிக்கிழமை எழுத்து தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2 ஆயிரத்து 626 பேர் தேர்வுகளை எழுதினர். இந்நிலையில், இந்த காவலர் தேர்வு முடிவுகள் இன்று (மார்ச் 21) திங்கட்கிழமை நள்ளிரவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் கூறுகிறது.
- Get link
- X
- Other Apps
குழந்தைகளுக்கு மொபைல்போன் தராதீர்! பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் திட்டவட்டம் ஆன்லைன்' வகுப்புகளுக்கு வாய்ப்பில்லை என்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'மொபைல் போன்' வாங்கி தரவேண்டாம்,' என, பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி, உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில், மாணவர்கள், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வருவதைக்கண்டறிந்து தடுக்கும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. வகுப்பு ஆசிரியர்கள், அவ்வப்போது, மாணவ-, மாணவியரின் புத்தகப்பைகளை சோதனை செய்து, மொபைல்போனை கண்டறிந்து வருகின்றனர். அதேநேரம், அவர்களிடம் இருந்து மொபைல் போனை வாங்கி வைத்துக்கொண்டு, பெற்றோரை வரவைத்து, அறிவுரை கூறி அனுப்பி வருகின்றனர். மாணவ, மாணவியர் சிலர், ஆசிரியர்களிடம் சிக்காமல் இருக்க, பள்ளி அருகே உள்ள ஏதாவது ஒரு கடையில், தங்கள் மொபைல் போனை கொடுத்து விட்டு, பள்ளி முடிந்தபின் மீண்டும் பெற்றுச் செல்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் நேற்று நடந்த பெற்றோர் ஆலோசனை கூட்டத்தில், இப்பிரச்னைக்கு முக்கியத்துவம்...
- Get link
- X
- Other Apps
தமிழக அரசு பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் ரூ.25,000 பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.! தமிழக அரசு இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் மானியம் பெறுவதற்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வக்பு நிறுவனங்களில் பணியாற்றும். உலாமாக்கல் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம். செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனத்தின் கொள்ளளவு 125cc மிகாமலும் வாகன விதிமுறை சட்டம் 1998ன்படி பதிவு செய் வேண்டும். மேலும் 01.01.2020க்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50% சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25,000 இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும். ...
- Get link
- X
- Other Apps
கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார் ! தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து , வேலைவாய்ப்பினை பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி , கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான ஒளிபரப்பினை தொடங்கி வைத்தார்.
- Get link
- X
- Other Apps
வறுமையின் அடையாளம் அல்ல, அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். இந்த பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் நடத்தப்படும். பட்ஜெட்டில் ரூ.36,895.89கோடி கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என மாற்றிக்காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஸடாலினின் வழிகாட்டுதல் படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளி மேலாண்மைகுழு கூட்டம் நடத்தப்பட்டது. திருச்சியில் மொத்தம் 1296 இடங்களில் நடைபெற்றது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதோடு வேலை முடிந்து விட்டது என்று இருந்துவிடாமல் குழந்தைகளின் கல்வி எப்படி உள்ளத...
- Get link
- X
- Other Apps
' குரூப் - 2' விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் நிறைவு குரூப் - 2 மற்றும் 2 ஏ'பணிகளில் அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும்அவகாசம், நாளை மறுநாள் முடிவதால், தேர்வர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவிகளில் 116 இடங்களையும், குரூப் - 2 ஏ பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மே 21ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 23ல் துவங்கியது. தேர்வில், 20 லட்சம் பேர் வரை பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்த அனைவரும், குரூப் - 2, 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வு பதிவில் சிக்கல் இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகையில் விண்ணப்பிக்க முடியாமல், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட தேர்வர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, மார்ச் 14ல், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் துவங்கியது. ஏப்., 13 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள், பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்புகளில், குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.அதேநேரத்தில், இந்த தகுதி மதிப்பெண்ணில், இட ஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுத வி...