Posts

Showing posts from March 17, 2022
Image
  நாடு முழுவதும் ஒன்றிய அரசு துறைகளில் 8.70 லட்சம் பணியிடங்கள் காலி புதுடில்லி, மார்ச் 17 நாடு முழுவதும் ஒன்றியஅரசு துறைகளில் 8.70 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது . நாடாளுமன்ற இரு அவை களிலும் நேற்று (16.3.2022) கேள்வி நேரத்தின்போது அரசு துறைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக உறுப்பினர்களின் பல்வேறு கேள்வி களுக்கு ஒன்றிய அமைச்சர்கள் பதிலளித்தனர் . இதில் குறிப்பாக , ஒன்றிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய பணி யாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதிலளித்தார் . அவர் கூறும்போது , 1-.3-.2020 நிலவரப்படி ஒன்றிய அரசின் 77 துறை களில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 941 பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டு உள்ளது . இதில் 31 லட்சத்து 33 ஆயிரத்து 658 பேர் பணி யாற்றுகிறார்கள் . 8 லட்சத்து 71 ஆயி ரத்து 283 பணியிடங்கள் காலியாக உள்ளன . இந்த புள்ளி விவரங்கள் செலவினத்துறையில் இருந்து பெறப்பட்டவை என தெரிவித்தார் . ரயில்வேயில் 2.98 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் , 1.40 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு
Image
  TNTET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ரெடியா? சிலபஸ், தேர்வு முறை இதுதான்! தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த தேர்வுக்கான தகுதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பம் உள்ளவர்கள், கட்டாயம் இந்த தேர்வு எழுதி, தகுதி மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் படிப்புகளை படித்துவிட்டு, ஆயிரக்கணக்கானோர், இந்த தகுதித் தேர்வை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்தநிலையில், தேர்வு வாரியம் தற்போது தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்
Image
தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம் : கண்டனம் தெரிவித்து மறியல் செய்த மாணவர்கள் !! ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த மேல் வீராணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 110க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 110 மாணவர்களுக்கு தற்போது தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அடிப்படையில் மூன்று ஆசிரியர்கள் வேறு பகுதிக்கு நேற்று மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 100 மாணவர்களுக்கு ஒரு தலைமையாசிரியர் ஒரு ஆசிரியர் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் பள்ளிக்கான புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர்கள் மாற்றம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் சம்பவம் குறித்து பானாவரம் காவல்துறையினர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாற்றம்
  பாடத்திட்டம் மாற்றம்.. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்...!!!!! தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களுக்க கால அட்டவணையும் வெளியாகி இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தொழிற்திறனை வளர்த்தெடுக்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றும் முதல்வர் கூறியதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் உலகதரத்திற்கு ஏற்ப மாற்றப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தொழில்துறையில் 2.1 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும் போது, அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு எழுதுபவர்களுக்கு.வெளியான எச்சரிக்கை அறிவிப்பு...!!!!!! தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்ததால் அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்திருந்தது. அதன் வாயிலாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது குரூப்-4 அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற விழுப்புரம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 2021-2022 ஆம் வருடத்துக்கான கண்காட்சி, கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் பங்கேற்று அரசு போட்டித் தேர்வுக்கான புத்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்து, அதில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார். அதன்பின் மாணவர்கள் மத்தியில் ஏடி எ
Image
  எழுத்தறிவு மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு; கல்வித்துறை செயல்பாடு பெருமையாக உள்ளது: UNICEF தலைவர் பாராட்டு! குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட உள்ள 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்புக் கல்விக்கழக' உருவாக்கத்தில் யுனிசெப் பங்கேற்க இருப்பதாக அதன் இந்தியா பிரிவின் தலைவர் ஹுயூன் ஹி பான் தெரிவித்துள்ளார். சாஸ்திரி பவனில் யுனிசெப் இந்தியா பிரிவின் தலைவர் ஹுயூன் ஹி பான் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது: - குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமூக நலத்துறை, நீதித்துறை, காவல்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன. குழந்தைகள் பாதுகாப்புக்கு பள்ளிக்கல்வித் துறையின் ஈடுபாடும் தொடர்ந்து தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் தொந்தரவு போன்றவை குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமுள்ளது. மதிய உணவுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களால் தமிழ்நாடு எழுத்தறிவு அதிகம் உள்ள மாநிலமாகத் திகழ்கிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் திட்டங்கள
Image
  மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க விரைவில் வல்லுநா் குழு அமைக்கப்படும்: அமைச்சா் க.பொன்முடி தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க விரைவில் வல்லுநா் குழு அமைக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா். பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பாடத் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் க.பொன்முடி பேசியது: 'கல்லூரிகளில் மத வெறியைத் தூண்டும் வகையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. அது குறித்து விவாதிக்கவுள்ளோம். நமது மாநிலத்திற்கான கல்விக் கொள்கை தயாரிப்பதற்கான வல்லுநா் குழு விரைவில் அமைக்கப்படும். அடுத்த கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்விற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் குறைந்ததாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரி முதல்வா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கல்வியின் தரத்தை உயா்த்துதல், ஆராய்ச்சிக் கல்வியை மேம
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு. வெளியான புதிய அறிவிப்பு.!!!!! குரூப் 2,குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது விவரங்களை தவறாக உள்ளீட்டு செய்தவர்கள் அதை திருத்தம் செய்து கொள்ள TNPSC வாய்ப்பு வழங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பல தடுப்பு விதிமுறை கள் மூலம் தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக குரூப் 2 ,குரூப் 2 A அறிவிப்புக்காக காத்திருந்த பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கடந்த 18ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தலைவர் குரூப் 2 குரூப் 2-ஏ தேர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு மொத்தம் 5831 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 குரூப் 2A தேர்வின் மூலமும், 5255 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு மூலமும் நடைபெற உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் என தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி ஒருமுறை நிரந்தர பதிவ