Posts

Showing posts from March 16, 2022
Image
  பாரதியார் பல்கலை தொலைதுார பட்டப்படிப்பின் கீழ், டிச., 21ல் நடந்த தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை பயன்படுத்தி, முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.மதிப்பெண் சான்றிதழ்கள், மாணவர்களுக்கு தபால் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 22ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.முழுமையாக பூர்த்தி செய்யாமலும், உரிய கட்டணங்கள் செலுத்தப்படாமலும் வரும் விண்ணப்பங்கள், தாமதமாக பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விபரங்களை, www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Image
  காலிப்பணியிடங்களை மறைப்பதா? திடீர் தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிவகங்கையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை அதிகாரிகள் மறைப்பதாக கூறி ஆசிரியர்கள் திடிரென வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட கல்வித்துறை மூலம் பொது இட மாறுதல் கலந்தாய்வானது சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் 160 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 115 ஆசிரியர்கள் ஏற்கனவே பணியிடமாறுதல் பெற்று சென்ற நிலையில் மீதமுள்ள 45 காலிப்பணியிடங்களை அதிகாரிகள் மறைப்பதாக கூறி பணியிட மாறுதல் கோரி வந்த ஆசிரியர்கள் திடீரென கூட்டரங்கின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காலிப்பணியிடங்களை முழுமையாக காட்டவும் அனைவருக்குமான பணியிட மாறுதலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடு...
Image
  TN TRB விரிவுரையாளர் தேர்வர்களே.. அனுபவ சான்றிதழ் ஒப்புதல் அளிக்கும் மையங்கள்.. மிக முக்கிய அறிவிப்பு...!!!!!! அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாகவுள்ள 1,060 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்துள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வருகிற 18 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்ச்சியடைந்த தேர்வர்கள் தங்களுக்கான ஆசிரியர் அனுபவ சான்றிதழில் தொழில்நுட்ப கல்வி கமிஷனரின் மேலொப்பம் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் சென்னைக்கு வருவதை தவிர்க்கும் அடிப்படையில் மாவட்ட அளவில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தொழில்நுட்பகல்வி இயக்குனரக கமிஷனர் லட்சுமிபிரியா அறிவித்தார். அந்த வகையில் சென்னை மத்திய பாலிடெக்னிக், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், செங்கல்பட்டு ராதாகிருஷ்ணன் நகர் அரசு பாலிடெக்னிக், காஞ்சிபுரம் செய்யாறு அரசு பாலிடெக்னிக், கோவை அரசு பாலிடெக்னிக் உட்பட 44 பாலிடெக்னிக்குகளில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு சான்றிதழில் மேலொப்பம...
Image
  போட்டித் தேர்வுக்கு தயாராகின்றவர்கள் கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படிக்க வேண்டும்: பயிற்சியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி அறிவுரை சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஓய்வுபெற்ற வருமான வரி அதிகாரியும், எழுத்தாளரும், போட்டித் தேர்வுகள் பயிற்சியாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: அரசுப் பணியில் சேர விரும்புவோர் முதலில் அரசு, தேர்வாணையம், தேர்வுமுறை ஆகிய 3 விஷயங்கள் மீது முழுநம்பிக்கை வைக்க வேண்டும். அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். திட்டமிட்டுப் படித்தால் இதில் வெற்றி பெறலாம். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு சமூக பின்புலம் அவசியமில்லை. தன்னம்பிக்கையுடன் தயாராவது முக்கியம். பாடங்களை கஷ்டப்பட்டு படிக்கக் கூடாது. இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். படிப்பது என்பது சந்தோஷமான விஷயம். சுகமான அனுபவம். எனவே, நிறைய படிக்க வேண்டும். அப்போது நமது பார்வை விரிவடையும். நேர்மையானவர்கள் அவசியம் ஒருவர் அரசுப் பணிக்கு ...
Image
  10,11,12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..இன்றே கடைசி நாள்-தேர்வுத்துறை இயக்கம்.! 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி சமீபத்தில் வெளியான நிலையில், பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு தமிழக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி இன்று மார்ச் 16 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் மார்ச் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது.
Image
  தனியார் துறைகளில் 50,000 காலி பணியிடங்கள். மார்ச் 20ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க!! வரும் 20-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 50,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிறுவனங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு முகாம் குறித்த செய்திக் குறிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் போன்ற துறைகள் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20ஆம் தேதி அன்று வண்டலூர் பிஎஸ் அப்தூர் ரஹ்மன் கிரசீன்ட் அறிவியல் மற்றும்...
Image
  ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக சந்தேகமா? சென்னை:ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதற்கான மொபைல் போன் எண்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் பழனிசாமி செய்திக்குறிப்பு:ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கானஅறிவிப்பு, மார்ச் 7ல் வெளியிடப்பட்டது. விண்ணப்ப பதிவு 14ம் தேதி துவங்கியது.இந்த தேர்வு குறித்து சந்தேகங்கள் இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, trbtetgrievance2022@gmail.com என்ற இ- - மெயில் முகவரியில் கடிதம் அனுப்பி விளக்கம் பெறலாம். மேலும், 94446 30028, 94446 30068 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.