Posts

Showing posts from March 15, 2022
Image
  பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் அனுபவ சான்றிதழ் பெறும் வசதி தமிழ்நாட்டிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்புப் பயிலகங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிக்கு அனுபவ சான்றிதழ்களைப் பெறுவதற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்களுக்கு சிறப்புப் பயிலகங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிக்கு அனுபவ சான்றிதழ்களைப் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி ஆணையர் லட்சுமிபிரியா (மார்ச் 15) வெளியிட்டுள்ள உத்தரவில், 'அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களின் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், அரசு, அரசு நிதி உதவி பெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்த, பணிபுரியும் விண்ணப்பதாரர்களின் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் பணிபுரிந்ததற்கான அனுபவச் சான்றிதழில் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும் எனக...
Image
  தேர்வர்கள் கவனத்திற்கு.. குரூப்-4 தேர்வு: TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!! குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்து இருந்தது. அதன் மூலமாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர்.  இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, குரூப் 2 தேர்வுக்கு Syllabus தயாரிப்பு பணி ஓரிரு நாட்களில் முடிவு பெறும். அதன்பின் இம்மாதத்தின் இடையில் குரூப்-4 தேர்வுக்கான அட்டவணையை வெளியிடுவதற்கான முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது அறிவிக்கவுள்ள குரூப்-4 தேர்வில் 5000 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், கலந்தாய்வு முடிவு பெறும்வரை பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப...
Image
  தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் 4,000 பேர் பணி நியமனம்? தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில் 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையில் ஊழியர் பற்றாக்குறையால் ஒரே நபர் 2, 3 கடைகளை கூடுதலாக கவனிக்கிறார். அதிக பணிச்சுமையால் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காராணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ரேஷன் கடைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப 100-200 பேரை நியமிக்க மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் 2020-2021ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தி ஆட்கள்தேர்வு செய்யப்பட இருந்தனர். இந்த ஆள்சேர்ப்பு நிலையங்கள், கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ரேஷனில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் வரை அரசியல்வாதிகள் வசூலித்தனர். அதிக புகார்கள் எழுந்ததால் நேர்காணல் முடிந்த நிலையில் தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதன்பின் 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 3,331 விற்பனையாளர்கள், 666 எடையாளர்கள் பணி இடங்களை நிரப்ப முன்பே வெளியிட்ட அ...
Image
  ஆசிரியர் தகுதித்தேர்வு ஆன்லைன் விண்ணப்பிப்பது  எப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு Click here download how to apply TNTET
Image
  ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிக்கும் போதும் ஏற்படும் சந்தேகங்களை கேட்பதற்கு மொபைல் எண் மற்றும் மெயில் id ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது 
Image
  கல்வியில் பின் தங்கியோருக்கு பயிற்சி... ஏற்பாடு; ஏப்ரலில் துவங்க கல்வித் துறை திட்டம் கடலுார் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வுஎழுத உள்ள மாணவ, மாணவியரில் பின் தங்கியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுஏப்ரல் மாதம் முதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வியில் மிகவும் பின்தங்கிய கடலுார் மாவட்டத்தில், கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ம் தேதியும் துவங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  கடலுார் மாவட்டத்தில் பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, சி.இ.ஓ., அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கல்வியில் பின் தங்கியுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் மீது தனிக்கவனம் செலுத்தி சிறப்பு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்ற முதற்கட்டமாக அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள...
Image
  தமிழ்நாடு படிப்பறிவுடன் திகழ என்ன காரணம்? - யுனிசெஃப் பாராட்டு கொரோனா காலத்துக்குப் பிறகு பள்ளிகளுக்கு குழந்தைகளை மீண்டும் அழைத்து வர உலக நாடுகள் திணறிய நிலையில், தமிழ்நாட்டில் முதலமைச்சரின் திட்டங்கள் இந்த நிலையை மாற்றியதாக, ஐ.நா.வின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பு பாராட்டியுள்ளது. குழந்தைகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணவும் தமிழக அரசும் யூனிசெஃப் இந்தியாவும் இணைந்து ஒருங்கிணைந்த சமூக கொள்கை திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இதுகுறித்து யூனிசெஃப் இந்தியாவின் தலைவர் ஹுயூம் ஹி பன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டிய அவர், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் திட்டங்களை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதாகக் கூறினார். மதிய உணவு திட்டத்தில் தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதாகவும், இந்த திட்டங்களால்தான் தமிழ்நாடு படிப்பறிவு உள்ள மாநிலமாக திகழ்வதாகவும் ஹுயூம் ஹி பன் குறிப்பிட்டார்.
Image
  10 ஆம் வகுப்பு தனி தேர்வர்களே.. இன்றே(மார்ச் 15) கடைசி நாள்..  தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வுத் துறை மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மார்ச் 9ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பயிற்சி வகுப்பு நடக்கும் நாள், மையம் போன்ற விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களை அணுக வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றுக்குள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  தமிழக அரசை கண்டித்து மார்ச் 22ல் போராட்டம்; ஆசிரியர் கூட்டணி முடிவு சிவகங்கை : சொன்னதை செய்யாத தமிழக அரசை கண்டித்து மார்ச் 22 ல் மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சட்டசபை தேர்தலின் போது ஆட்சி அமைந்தால் அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்.,1 முதல் சி.பி.எஸ்.,யை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆட்சியில் அமர்ந்து 10 மாதங்களை தொட்ட போதும் இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதை கண்டித்து இந்திய பள்ளிஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மார்ச் 22 அன்று மாலை அந்தந்த மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சி.பி.எஸ்., தேசிய கல்வி கொள்கை ரத்து, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கும் கோரிக்கையை முன்வைத்து மார்ச் 28, 29 ல் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கும். இடைநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். உயர்கல்வி ஊக்கத்...