Posts

Showing posts from March 13, 2022
Image
  போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? வட்டார கல்வி அலுவலர் விளக்கம்  புதுக்கோட்டை: துண்டு சீட்டுகளில் குறிப்பு எடுத்து படித்து வந்தால் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என்று திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கு.கருணாகரன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மேற்பனைக்காட்டில் இன்று(மார்ச் 13) நடைபெற்ற போட்டித் தேர்வு வழிகாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது: "டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 6 முதல் 10 -ம் வகுப்பு புத்தகங்களை படித்தால் போதுமானது. அதில், ஆங்கில புத்தகம் படிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு புத்தகத்தையும் புரியும்படியாக வாசித்து, அவற்றில் இருந்து நோட்டுகளில் எழுதாமல், துண்டு சீட்டுகளில் குறிப்பு எடுத்து படிக்க வேண்டும். தினமும் 12 மணி நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். அதிகபட்சம் 3 நாட்களில் ஒரு புத்தகம் வீதம் குறிப்பு எடுத்துவிடலாம். அதன் பிறகு துண்டு சீட்டை மட்டுமே படிக்க வேண்டும். படித்த புத்தகங்களை மறுபடியும் படிக்கக்கூடாது. போட்டித் தேர்வுக்காக தயாராவோர் முதலில் படிப்புக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். அதோடு, ஆர்வம், அக்கற
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு-2022-க்கு விண்ணப்பிப்பது எப்படி?தேர்வு நடைபெறும் நாள் ,வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் . இந்த நிலையில்  2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு  தாள் I மற்றும் தாள் II-க்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.  தேர்வின் பெயர்: ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்)     தகுதிகள்: தாள்-I: இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ் தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வியை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  தாள்-II: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  வயது வரம்பு: குறைந்தபட்ச 18 வயது பூர்த்தி அடைந்திருக்
  அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை! தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் நடைபெற்ற டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். காலிப்பணியிடங்கள்: தமிழகத்தில் கடந்த 2020 ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறையாத நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவும், அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் நடைபெற்று வந்தது. அதனால் அரசு பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. இந்த நேரத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனால் ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. குறிப்பாக அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப போதிய ஆசிரியர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. அதனால்
Image
  காவல் உதவி ஆய்வாளா் தோவுக்கு விண்ணப்பிப்போா் கவனத்துக்கு... காவல் உதவி ஆய்வாளா் தோவுக்கு விண்ணப்பிப்போருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவாணையம் மூலம் கோட்டம் மற்றும் ஆயுதப் படையில் 444 உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தப் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்புவோருக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்யவும், அவா்களுக்கு உதவும் வகையிலும் ஆணையரத்தில் உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது.  விண்ணப்பதாரா்கள் நேரிலோ அல்லது 9445465974, 996596614 என்ற எண்களிலோ தொடா்பு கொண்டு சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தாா்.
Image
  புதுவை பள்ளிக் கல்வித் துறை மூலம் 148 ஒப்பந்த மழலையர் ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ரங்கசாமி பணி ஆணையை வழங்கினார் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மூலம் அரசுப் பள்ளிகளில் பணியாற்ற 148 முன் மழலையர் ஆசிரி யர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், முறையே புதுச்சேரியில் 85, காரைக்காலில் 63 என தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு புதுவை கல்வித்துறை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி 148 பேருக்கு முன் மழலையர் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்றவுடன், 'அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பபடும்' என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, துறைகள் தோறும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறோம். குறிப்பாக, கல்வித்துறையில், மழலையர் பள்ளிகளில் பாடம் கற்றுத் தர 148 ஆசிரியர்கள் ஒப்பந்தஅடிப்படையில் நியமிக்க
Image
  அரசு சார்பில் TNPSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு.! எப்படி விண்ணப்பம் செய்வது..? முழு விவரம். TNPSC Group தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC Group- I & IIA 2022 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டுதல்‌ மையத்தில்‌ தகுந்த பயிற்றுநர்களைக்‌ கொண்டு வகுப்புகள்‌ நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ TNPSC Group- I & IIA 2022) 5,413 காலிப்பணியிடங்கள்‌ வெளியிட்டுள்ளதால்‌ போட்டித்தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச பயிற்சி வகுப்பில்‌ சேர்ந்து, பயன்பெறலாம்‌. தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டுதல்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தண்ணார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. மேலும்‌ தன்னார்வ பமிலும்‌ வட்டத்தில்‌ போட்டித்தேர்விற்கு, 'தேவையான சமச்சீர்கல்வி பாடப்புத்தகம்‌ மற்றும்‌ புத்தகங்கள்‌ பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இப்பயிற்சி
Image
  குரூப் 2 தேர்வு: நாளை முதல் விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் - தேர்வாணையம் அறிவிப்பு குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்து அதில் திருத்தங்களை செய்ய விரும்பினால் திங்கள்கிழமை (மாா்ச் 14) முதல் அதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அரசுப் பணியாளா் தோவாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தோவு கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா, சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:- குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு பலரும் விண்ணப்பம் செய்து வருகின்றனா். விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதன் மூலம் வெற்றியைத் தவறவிடும் தேர்வா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதன்படி, இணைய வழி விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோா் மாா்ச் 23-ஆம் தேதி வரை அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனை தோவாணைய இணையதளத்தின் (www.Tnpsc.gov.in) வழியே செய்யலாம். இணைய வழி விண்ணப்பத்துக்கு எதிரே உள்ள எடிட் என்ற பகுதிக்குச் சென்று திருத்தம் செய்ய வேண்டும். இறுதியாக சேமித்து அதனை சமா்ப்பித்து அதற்குரிய நகலினை பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்த பிறகு திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமா்ப்பிக்க வேண
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு... நாளை முதல் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!! தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தகுதியானவர்கள் மார்ச் 14-ஆம் தேதி முதல் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.