உபரி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, பணி நிரவல் இடமாறுதலை, வரும் 14ம் தேதி மேற்கொள்ள, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து பள்ளிகளிலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர்களின் எண்ணிக்கை நிலவரப்படி, ஆசிரியர்கள் விகிதத்தை முடிவு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், பாட வாரியாகவும், மாணவர்கள் விகிதத்தின்படியும் கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும்.வரும் ஜூன் மாதம் ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்கள், உபரியான இடத்தில் பணியாற்றினால், அவர்களை பணி மாறுதல் செய்ய வேண்டாம். ஜூன் மாதம் ஓய்வு பெற்றதும், அந்த இடத்தை, பள்ளிக் கல்வி கமிஷனர் தொகுப்புக்கு &'சரண்டர்&' செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Posts
Showing posts from March 12, 2022
- Get link
- X
- Other Apps
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 12- வரலாறு முக்கியம் . எப்படிப் படித்தால் மதிப்பெண்களை அள்ளலாம்? போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை, புரிந்து, திட்டமிட்டு, கேள்வித் தாள்களை ஒப்பிட்டுப் படித்தால், ஒவ்வொருவரும் தன் முயற்சியிலேயே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் என்கிறார் ஆட்சியர் கல்வி அகாடமியின் நிறுவனர் ரத்தினம். யூபிஎஸ்சி தேர்வில் இந்தியா பற்றி விரிவாகவும் தமிழ்நாடு குறித்து குறைவாகவும் படிப்போம். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இந்தியா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். இது அனைத்துப் பாடங்களுக்கும் பொருந்தும். பாடத்திட்டப் பகுதிகளைப் படிப்பதைப் போல, பழைய கேள்வித் தாள்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். ஏனெனில் அதன் மூலமே எப்படிக் கேள்விகள் கேட்கப்படலாம் என்பது புரிய வரும். இந்தப் பகுதியில் வரலாறு பகுதியை எப்படிப் படிக்க வேண்டும் என்று பார்க்கலாம். பொதுவாக வரலாறு பகுதியை 4 பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1.வரலாறு மற்றும் பண்பாடு 2. பழங்கால இந்தியா 3.இடைக்கால இந்தியா 4. நவீன இந்தியா முதல் பகுதியான வரலாறு மற்றும் பண்ப
- Get link
- X
- Other Apps
குரூப்-2 மற்றும் குருப்- 2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் டி.என்.பி.எஸ்.சி அமைப்பு 5,413 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வு நாள் வரும் மே மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும், தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இ ந் நிலைடயில் குரூப்2 மற்றும் குருப் 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
ஏப்ரல் வரை மாணவர் சேரலாம் - பள்ளி கல்வி துறை அனுமதி! 'ஒன்பதாம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பருடன் மாணவர் சேர்க்கை நிறுத்தி கொள்ளப்படும். அதன்பின், மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதி விலக்கு காரணமாக, டிசம்பர் வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால், பல தனியார்பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.
- Get link
- X
- Other Apps
சத்துணவு அமைப்பாளர், சமையலர் 35 ஆயிரம் பணியிடங்கள் காலி தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பாண்டி தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது: 1982 ல் சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது. சத்துணவு ஊழியர்கள் சங்கம் 1985 தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர் சம்பளம் 150 ரூபாய் என்பது இன்று 7500 ரூபாய் ஆகவும், சமையலர் 60 ரூபாய் என்பது 7300 ரூபாயாகவும், உதவியாளருக்கு 30 ரூபாய் என்பது 5900 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.பணி ஓய்வு பெறும் அமைப்பாளர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது பல்வேறு போராட்டங்களால் கிடைத்துள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தப்பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.முழுமையான காப்பீட்டு திட்டம், தேர்தல் காலத்தில் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன் வர வேண்டும். தமிழகத்தில் காலியாகவுள்ள 35 ஆயிரம் பணியிடங்களை உடனடியா
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் திறன் பயிற்சி கட்டாயம் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு 14ஆம் தேதி முதல் கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படஉள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் சுதன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்கி வருகிறது. இக்கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள தலைமையாசிரியர்கள், 9 முதல் 12 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள். தொழிற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், கணிணி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, கலை மற்றும் பிற) என அனைத்து ஆசிரியர்களுக்கும் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்காக செயல்பாடுகள் முதலியன உள
- Get link
- X
- Other Apps
TN TRB ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டுமா..? CM CELL Reply ..!! CM CELL அரசு உதவி பெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் நடப்பு ஆண்டுக்கான TET தேர்வில் தேர்ச்சி பற்றி reply அனுப்பியுள்ளது. கட்டாய கல்வி சட்டத்தை மத்திய அரசு 2010 ஆகஸ்ட் 23 அமல்படுத்தியது. இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அமலாக்கம் செய்த தேதிக்கு முன்னதாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் இல்லை என உத்தரவு நீதிமன்றம் வாயிலாகவும் அரசு உத்தரவு மூலம் அரசு செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டிருந்தது. அரசு உதவிபெறும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனங்கள் 2012 நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை அடிப்படையில் இனிமேல் பணி நியமனங்கள் மேற்கொள்ளும்போது டெட் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை அடிப்படையில் இனிமேல் பணி நியமனங்கள் மேற்கொள்ளும்போது டெட் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே தேர்வு செய்யவேண்டும் என அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ச
- Get link
- X
- Other Apps
TRB: வரும் 18-ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்ற மீண்டும் வாய்ப்பு.! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.! பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, சரியாக பதிவேற்றம் செய்யப்படாத நபர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 2017-18 ஆண்டிற்கு அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே, விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. விண்ணப்பங்களுடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யத் தெரிவிக்கப்பட்டது. பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வுகள் 2021 டிசம்பர் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையில் ஆன்லைனில் நடந்தது. பின், இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. ஏற்கெனவே, பணிநாடுனர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்துள்ள