Posts

Showing posts from March 10, 2022
Image
  கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!: சென்னையில் மார்ச் 12ம் தேதி ஆதி திராவிடர், பழங்குடி இனத்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு..!! சென்னையில் மார்ச் 12ம் தேதி ஆதி திராவிடர், பழங்குடி இனத்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது மத்திய அரசாங்கத்தால் ஜூன் மாதம் 1968ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான வாழ்வாதாரத்தை முன்னேற்ற இந்த மையம் நிறுவப்பட்டது. இந்த மையத்தில், தொழிற்கல்வி பயிற்றுவித்தல், தொழில் வழிகாட்டுதல், ஆலோசனை, நம்பிக்கை வளர்ப்பு திட்டம், முன் ஆட்சேர்ப்பு பயிற்சி, வேலை வாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு, ஆகிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மையத்தின் மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலை வாய்ப்பு முகாம், ஆதி திராவிடர் மற்றும் பழங்...
Image
  444 காலிப்பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்களுக்கு.. தமிழ்நாடு காவல் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு..!!!! தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள Taluk SI பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலியிடங்கள் : Taluk SI - 444 கல்வித்தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 01.07.2022 அன்றைய தேதிப்படி General / OC - 20 வயது முதல் 30 வயது வரை BC / MBC - 20 வயது முதல் 32 வயது வரை SC / ST - 20 வயது முதல் 35 வயது வரை அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகளும் வழங்கப்படும். சம்பளம் : 36,900/- முதல் 1,16,600/- + படிகள் தேர்வு செய்யும் முறை : Written exam Physical Endurance Test (PET) Physical Measurement Test (PMT) Viva-Voice மதிப்பெண் பங்கீட்டு முறை : Written Examination - 70 Marks Physi...
Image
  பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. அரசு இ-சேவையில் கூடுதலாக 42 சேவைகள்..! தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் அரசு இ-சேவை மையங்களை நடத்தி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது; 'இ-சேவை மையங்களில் ஆதார் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி சமீபத்தில் அறிமுகமானது. அத்துடன், மேலும் 134 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் 42 புதிய சேவைகளை இணைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில், 176 சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் பெற முடியும். அடுத்த கட்டமாக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆறு சேவைகள்; பள்ளிக் கல்வித் துறையின் 23 சேவைகள் என 29 சேவைகளை இ-சேவையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது' என்று அவர்கள் கூறினர்.
  நள்ளிரவு வரை நீடித்த கலந்தாய்வு; பட்டதாரி ஆசிரியர்கள் அதிருப்தி தேனி : ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நள்ளிரவு 2:00க்கு மேலும் தொடர்ந்ததால் ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இணையதள பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் 5 முறை ஒத்திவைக்கப்பட்டது. பள்ளி கல்வித்துறையின் 'எமிஸ்' இணையதளத்தில் மார்ச் 4 முதல் நேற்று வரை கலந்தாய்வு நடந்தது. இதில் காலை 9:00 மணிக்கு துவங்கிய கலந்தாய்வு இரவு 2:00 மணி வரை நீடித்தது. மாறுதல் பெற்ற மறுநாளே பணியில் சேர வேண்டும். ஆனால் உடனே மாறுதல் ஆணை வழங்காததால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் மோகன் கூறுகையில், 'எமிஸ்' இணைய தளத்தில் ஒருவருக்கு கலந்தாய்வு முடிந்த பின் அடுத்த 'லிங்க்' வருகிறது. மாவட்டத்திற்குள் இடம் இல்லாவிடில் மாநிலம் முழுவதும் உள்ள இடங்களை தேர்வு செய்கின்றனர். இதனால் ஒருவருக்கு 10 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. மார்ச் 14ல் பணிநிரவல், 15ல் மாவட்டத்திற்குள், 16ல் மாவட்டம் விட்டு மாவட்டம் என கலந்தாய்வு நடக்கிறது. இதில் காலையில் விரைவா...
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ். தமிழ்வழி சான்றிதழ் கட்டாயம். தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு.!!!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறை காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் குரூப் 2, குரூப் 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி மார்ச் 23ஆம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மே 26-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தற்போது ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி, தேர்வு முறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெறுவது அவசியமாகும். மேலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது. அதனால் தமிழ் தேர்வு தமிழ் வழியில் பயின்று அவர்கள் தேர்வுக்கு வி...
Image
  முதல்வர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு..அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..ஊதியத்துடன் பயிற்சியும் உண்டு! சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் புத்தாய்வு திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களை வேலையில் அமர்த்த முடிவு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன் று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வளத்தை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில் இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.5.66 கோடி ஒ...
Image
  தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணைகள் வெளியீடு! தமிழக முதலமைச்சரின் திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. திட்டங்களை செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒதுக்கப்பட்ட நிரல்களைப் பற்றிய தரவு-உந்துதல் முடிவெடுப்பதைக் கண்காணிப்பதும், சிக்கல்களைக் கண்டறிவதும், உதவி செய்வதும் அதிகாரிகளின் முதன்மைப் பணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 12 செயலாக்கங்களை தமிழகஅரசு தெரிவித்துள்ளது. அதன்படி, (1) நீர் வளங்களை பெருக்குதல்,  (2) விவசாய உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் இணைப்புகளை உருவாக்குதல்,  (3) அனைவருக்கும் வீடு,  (4) கல்வித் தரத்தை மேம்படுத்துதல்,  (5) சுகாதாரக் குறிகாட்டிகளை மேம்படுத்துதல்,  (6) சமூக உட்சேர்க்கை,  (7) உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாடு,  (8) திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு,  (9) நிறுவன கடன்,  (10) பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்,  (11) சுற்றுச...
Image
  அரசு பள்ளிகளில் டீச்சர் வேலை.. அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்..!!!! தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் பரப்புரை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் "நம் பள்ளி நம் பெருமை" என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான மேலாண்மை குழுக்களின் அவசியம் பற்றியும், மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்ள இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டுகளில் இருந்து வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும். பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் அவர்கள் மீது கடும் நடவ...
Image
  ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு நடைபெறும் நாள், வயது வரம்பு முக்கிய தகவல் 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II-க்கு மார்ச் மாதம் 14-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வின் பெயர்: ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) தகுதிகள்: தாள்-I: இதற்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ்-2 தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தாள்-II: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.500, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தேர்வில் ...
Image
  Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டமா? பள்ளிக்கல்வித்துறை கூறுவது என்ன?  தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா என என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் ஓய்வூதிய திட்டம் ரத்து கடந்த 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஜெயலலிதா கையில் எடுத்தார். தமிழக அரசின் வருமானத்தில் பெரும் பங்கு அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு மட்டுமே செல்கிறது எனும் உண்மையை முதன் முதலில் அம்பலப்படுத்தியது ஜெயலலிதா தான். இதனையடுத்து, தமிழகத்தில் 2003ம் ஆண்டுக்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட பல்வேறு பாதகமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா போன்றே அரசு ஊழியர்களுக்க...
Image
  எழுத்துத்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!! கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை இந்த ஆண்டு நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது அந்த வகையில் மே மாதம் 5,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதேசமயம் மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பணியிடத்திற்கான முதன்மை எழுத்துத் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 6, 7 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த எழுத்து தேர்வு மே மாதம் ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிசி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை காணலாம் என்று தெரிவித்துள்ளது
Image
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் ஏப்ரல் 5 தேதி முதல் நடக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. சென்ற வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இல்லாமல் திருப்புதல் தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். ஆனால் இந்த வருடம் கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும் அறிவித்துள்ளனர். பொதுத்தேர்வு தேதியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 10 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பதினோராம் வகுப்பு தேர்வுகள் மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்க உள்ளது. மேலும் இதன் தேர்வு முடிவுகள் பன்னிரண்டாம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு ஜூன் 7 ம் தேதியும், பத்தாம் வகுப்பிற்கு ஜூன் 17ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆறாம் வகுப்பு முதல் ஒன்ப...