குருப் 2, 2ஏ பணியிடங்களுக்கு இலவச பயிற்சி விருதுநகர் : ''டி.என்.பி.எஸ்.சி., குருப் 2, 2ஏ காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுவதாக,'' கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி., குருப் 2, 2ஏ காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மார்ச் 7 முதல் தினசரி விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது. இப்பயிற்சியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். பங்கேற்போர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார் பயிலம் வட்ட நுாலகத்தில் தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்தி கொள்ளலாம். tamilnaducareerservices.tn.gov.in ல் காணொளி காட்சி மூலம் கற்பித்தல், பாடக்குறிப்புகள், புத்தகங்கள், மாதிரி வினாத்தாள்கள் பயன்படுத்தி கொள்ளலாம். விருப்பம் உள்ளோர் 96...
Posts
Showing posts from March 9, 2022
- Get link
- X
- Other Apps
அரசு வேலை வேண்டுமா?.. சிவகங்கை மாவட்டம் முழுவதும் இலவச வகுப்புகள்.. அறிக்கை வெளியிட்ட அதிகாரி..!! சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நமது மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ வட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு தினமும் இலவசமாக நடைபெறுகிறது. இந்த வகுப்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள 5,529 காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 4 தேதி முதல் நடைபெற்று வருகிறது. எனவே அரசு வேலையை தன்னுடைய கனவாக கொண்டு உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும் பயன் தரும் வகையில் மத்திய மாநில அரசா...
- Get link
- X
- Other Apps
அதிர்ச்சி எட்டு முதுகலை ஆசிரியர்கள் திடீர் பணியிட மாற்றம் ; பொதுத்தேர்வு மாணவர்கள் கல்வி கேள்விக்குறி முன்மாதிரியாக திகழும் பெருநகர் பள்ளியில் அவலம் உத்திரமேரூர் : முன்மாதிரியாக திகழும் பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை ஆசிரியர்கள் எட்டு பேர் ஒரே நேரத்தில் பணியிடம் மாறுதலாகி இருப்பதால், பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 1,820 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.கணிதம், உயிரியல், வரலாறு, உள்ளிட்ட எட்டு பாடப் பிரிவுகளில் 400க்கும் அதிகமான பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பயில்கின்றனர்.கடந்த 2017ல், 926 மாணவர்கள் பயின்ற நிலையில், இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மாலதி என்பவர் பொறுப்பேற்றதை தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை இரு மடங்கு உயர்த்தியது.கடந்த 2018ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு முன்மாதிரி பள்ளியாக தேர்வானது. இதையடுத்து, அரசு நிதி மற்றும் தனியார் நன்கொடை வாயிலாக, பல கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், 'சி...
- Get link
- X
- Other Apps
TNPSC: வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு! வரும் 19-ம் தேதி நடைபெறும் வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று TNPSC அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 19-ஆம் (முற்பகல் மற்றும் பிற்பகல்) சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
அச்சத்தில் ஆசிரியர்கள்... தேசிய வரைவு உயர்கல்வித்தகுதிகள் திட்டத்தை திரும்பப்பெற கோரிக்கை தேசியக்கல்வி கொள்கை 2020 வரைவு, உயர்கல்வித் தகுதிகள் கட்டமைப்பு, கல்வித்திட்ட கிரெடிட் வங்கித்திட்டம் ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டுமென அகில இந்திய கல்விப் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்பு சங்கத்தின் முன்னாள் துணைவேந்தரும் நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினருமான ஜவகர்நேசன் கூறும்போது, "உலகம் முழுவதும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ இந்திய அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. ஏபிசி முறை இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் வரைவு உயர்கல்வித் தகுதி கட்டமைப்பினை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தாம் பயிலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே எந்தப் பல்கலைக்கழகத்திலும் படிப்பதற்கு வழிவகுக்கும். மேலும் 70 விழுக்காடு பாடங்களை ஆன்லைன் மூலமாகப் படிக்க ஏபிசி முறையானது ஊக்குவிக்கும். அச்சத்தில் ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பல்க...
- Get link
- X
- Other Apps
மார்ச் 20 இல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.. எதற்கு இந்த கூட்டம்.. இதன் பயன் என்ன ? அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டத்தை மார்ச் 20-ஆம் தேதி நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் பரப்புரை தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழுவை மேம்படுத்தும் வகையில் 'நம் பள்ளி நம் பெருமை' என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும் மேலாண்மை குழுக்களின் அவசியம் குறித்து பெற்றோர் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு பள்ளி மேலாண்மை...
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வரும் 19-ம் தேதி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் வரும் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுவதன் காரணமாக, அதற்கு முந்தைய நாளான 19-ம் தேதி சனிக்கிழமையன்று அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் பணியாளர் தேர்வு ஆணையம்(எஸ்.எஸ்.சி.- சி.எச்.எஸ்.எல்.) தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
இன்று முதல் 10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் விற்பனை! கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்புக்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தன. தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கும் நிலையில் பிப்ரவரி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. மே 5ம் தேதி 12 ம் வகுப்பு பொதுத்தேர்வும், மே 9ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு , மே 6 முதல் 10 வகுப்பு பொதுத்தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 10,11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான விண்ணப்பங்கள் இன்று மார்ச் 9 முதல் 15 வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்க தவறிய தேர்...
- Get link
- X
- Other Apps
அண்ணா பல்கலை. பாடத் திட்டம் விரைவில் மாற்றம்: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தகவல் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டம் நவீனத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார். தேசிய அறிவியல் தொழில்நுட்பக் குழுமம், மாநில உயர்கல்வி மன்றம் சார்பில், தேசிய கணிதமற்றும் அறிவியல் தினத்தை முன்னிட்டு 2 நாள் சிறப்புக் கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நேற்று தொடங்கியது. தமிழக உயர்கல்வித் துறைஅமைச்சர் கே.பொன்முடி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய காலகட்டத்தில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. எனவே, 25 ஆண்டுகளுக்குப் பின், அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தை மாற்றமுடிவு செய்யப்பட்டு, அதற்காகஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் 90 பேர் இதில், பல்வேறு துறை பேராசிரியர்கள், தொழில் நிறுவனப் பிரதிநிதிகள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள் என 90 பேர் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், வேலைவாய்ப்...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர், வகுப்பறை பற்றாக்குறை: மேயரிடம் மனு அளித்த மக்கள் திருப்பூர்:மாநகராட்சி துவக்க பள்ளியில் உள்ள ஆசிரியர், வகுப்பறை பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாஸ்கோ நகர் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், மேயர் தினேஷ்குமாரிடம் அளித்த மனு:மாஸ்கோ நகர் மாநகராட்சி பள்ளியில், 870 பேர் படிக்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு வகுப்பில் 120 பேர் வரை உள்ளனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே வகுப்பு நடைபெறுகிறது. இதிலும் வகுப்புக்கு 70 பேர் என்ற அளவில் உள்ளனர்.மேலும் இங்கு ஆசிரியர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர். மாணவர் நலன் கருதி, கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.