TNTET Notification 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 14 முதல் எப்படி விண்ணப்பிக்கலாம் : முழு விவரம்.. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.
Posts
Showing posts from March 8, 2022
- Get link
- X
- Other Apps
அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அதிகப்படுத்துவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில், மேலாண்மைக் குழுவை மேம்படுத்தும் வகையில் "நம் பள்ளி - நம் பெருமை" என்ற புதிய செயலி ஒன்றை அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு அங்கிருந்த செய்தியாளர்களிடம் அன்பில் மகேஷ் கூறியதாவது: அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மைக் குழுக்களின் அவசியம் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் அடுத்த
- Get link
- X
- Other Apps
புதிய கல்வி கொள்கைக்கு பதில் தமிழ்நாடு கல்வி கொள்கை: அமைச்சர் பொன்முடி மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்த நிலையில் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழ்நாடு அரசு புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்றும் அதற்காக குழு அமைக்க திட்டமிடப்பட்டு கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கையில் உள்ள சிறந்த அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தேவையான கல்வியை அமைப்பதற்கு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்ற அமைச்சரின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Get link
- X
- Other Apps
10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கவனத்திற்கு 10,11, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை சற்றுமுன் தமிழக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 9ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 16 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணத்துடன் மார்ச் 18 முதல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது இதனை அடுத்து 10,11, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மேற்கண்ட தேதிகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
- Get link
- X
- Other Apps
குரூப் 2, குரூப் 2A முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள். 19ஆம் தேதி முதல் ஆரம்பம் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் வருகிற 19 தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 19ம் தேதி தொடங்குகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மட்டும் இருந்தால் போதும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வினை 21 வயது முதல் 32 வயதுவரை எழுதலாம்.பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், எஸ்சி, எஸ்டி போன்றோருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை எனவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. காலியிடங்களை பொருத்தமட்டில் நேர்முகத்தேர்வு டன் கூடிய குரூப்-2 தேர்வு மூலம் 116 காலி பணியிடங்களும் குரூப்-2 தேர்வு மூலம் 5413 காலி பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 5523 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன வ
- Get link
- X
- Other Apps
தொலைதூர கல்வி நிறுவனம் மூலம் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.! தொலை தூரக் கல்வி இயக்ககம் வாயிலாக பட்டப்படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை பல்கலைக்கழக தொலை நிலை கல்வி நிறுவனத்தில் நிகழ் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேரக்கை நடைபெறுவதாகவும், இதற்காக வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கை மையத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர, மற்ற அனைத்து வேலை நாட்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் 131 கற்றல் மையங்கள் வாயிலாகவும்
- Get link
- X
- Other Apps
தமிழக காவல் துறையில் 444 உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு மார்ச் 8 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. மற்ற துறைகளை தொடங்கி தற்போது தமிழக காவல் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNUSRB தேர்வு வாரியம் காவலர்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு TNUSRB (pc) பணியிடத்திற்கான தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் எஸ்ஐ தேர்வுக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த தேர்வில் அரசின் புதிய வழிகாட்டுதலின்படி தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை முதல் மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு குறித்த தகுதிகள் செய்முறை தேர்வு எழுத தேர்வு பாடத்திட்டம்
- Get link
- X
- Other Apps
ஆசிரியா் தகுதித்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியா் தகுதித் தோவுக்கான ('டெட்') விண்ணப்பப் பதிவு இணைய வழியில் திங்கள்கிழமை(14-03-2022) முதல் தொடங்கியுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் பணியில் சேருவதற்கு, 'டெட்' எனப்படும் ஆசிரியா் தகுதி தோவில் கட்டாயம் தோச்சி பெற வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதித் தோவில் முதல் தாளிலும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற தகுதித் தோவின் இரண்டாம் தாளிலும், தோச்சி பெற வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோவுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை(14-03-2022) இரவு முதல் இணைய வழியில் தொடங்கியுள்ளது. தகுதியுடையவா்கள் என்ற ஆசிரியா் வாரிய இணையதள முகவரியில் வரும் ஏப்.13-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதையடுத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாா்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 வரை இணையவழியில் சமா்ப்பிக்கலாம். தகுதித் தேர்விற்கான இரண்டு தாள்களையும் எழுத விரும்புவோா் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்ட