ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் II ( TNTET Paper I and 11 ) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக இன்று வெளியிடப்பட்டுள்ளது . எனவே , விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக ( http://www.trb.tn.nic.in ) விண்ணப்பிக்க ஏதுவாக 14.03.2022 முதல் 13.04.2022 பிற்பகல் 5.00 மணி வரை வழங்கப்படுகிறது. Click here Notification
Posts
Showing posts from March 7, 2022
- Get link
- X
- Other Apps
பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.CUTNT/T/02/2022 மொத்த காலியிடங்கள்: 17 பணி: Professor, Assistant Professor, Associate Professor துறைவாரியான காலியிடங்கள்: 1. Applied Psychology - 01 2. Chemistry - 01 3. Commerce - 02 4. Computer Science - 02 5. Economics - 01 6. English - 01 7. Geology - 01 8. History - 01 9. Law - 03 10. Management - 01 11. Statistics & Applied Maths - 01 தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப
- Get link
- X
- Other Apps
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள் அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி குறித்த அறிவிப்பு மே 2022 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்தல் தொடர்பான அறிவிப்பினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடைபெறவுள்ள மே 2022, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள், இவ்வியக்ககத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 09.03.2022 ( புதன் கிழமை) முதல் 15.03.2022 ( செவ்வாய் கிழமை) வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த உடன், மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்
- Get link
- X
- Other Apps
செய்முறை பயிற்சி.. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!!!! தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக அதிகரித்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புக்கள் நடைபெற்றன. மேலும் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு கால அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது, 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2-ம் தேதி முடிவடைய உள்ளது. அதேபோல் பொது தேர்வும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரையும் மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடத்தப்படுகிறது. மேலும் மே 6ஆம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர
- Get link
- X
- Other Apps
ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடத்தில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மேலும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வுக்கால திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடத்தில் 9494 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபெறும் எனவும் இத்தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடைநிலை
- Get link
- X
- Other Apps
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூல்கள் - பொது நூலகத்துறை புதிய கட்டுப்பாடு அரசு நூலகங்களுக்கு பருவ இதழ், நாளிதழ் வாங்க புதிதாக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் கூட்டம் கன்னிமாரா பாெது நூலகத்தில் நடைபெற்றது. பொது நூலகத்துறையின்கீழ் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களில் நாளிதழ்கள், பருவ இதழ்கள் பெறுவதற்காக பொது நூலக இயக்குநரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் உள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் 514 தமிழ்ப் பருவ இதழ்களும், 168 ஆங்கில பருவ இதழ்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் பெரும்பாலானவை நிறுத்தம் செய்யப்பட்டும், வாசகர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இதழ்களும் அடங்கி உள்ளன. எனவே, வாசகர்கள், மாணவர்கள், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் ஆகியோரின் தேவையின் அடிப்படையில் பட்டியலை மறு சீரமைப்பு செய்வதற்காக 10 துறை சார் நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்தத் தேர்வுக்குழுவின் கூட்டம் கன்னிமாரா பாெது நூலகத்தில் பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் தலைமையி
- Get link
- X
- Other Apps
3 நாட்கள் நடந்த குரூப் 1 தேர்வு முடிந்தது 66 பதவிகளுக்கு 3,800 பேர் எழுதினர்: மே மாதம் ரிசல்ட் வெளியீடு சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) துணை கலெக்டர் 18 இடம், போலீஸ் டிஎஸ்பி-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்-14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்-4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான மெயின் தேர்வு கடந்த 4ம் தேதி தொடங்கியது. சென்னையில் திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் பிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 37 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடந்தது. முதல் நாளான கடந்த 4ம் தேதி முதல் தாள் தேர்வு நடந்தது. 5ம் தேதி(நேற்று முன்தினம்) இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இறுதி நாளான நேற்று 3ம் தாள் தேர்வும் நடந்தது. 3 நாட்கள் நடந்த குரூப் 1 மெயின் தேர்வுகான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மே மாதம் மத்தியில் ரிசல்ட்டை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு: கல்வித் துறை தகவல் தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடைபெறும். அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். அதனால் 1 முதல் 5-ம் வகுப்புவரை பிரத்யேக தேர்வுக் காலஅட்டவணை வெளியிடப்படவில்லை. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத் துறை மூலமாக மாநில, மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் மே 13-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் அனைத்து கல்விசார் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு, மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி வரை கோடைவிடுமுறை விடப்படும். விடுமுறை முடிந்து 2022-23 கல்வி ஆண்டுக்காக ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்..
- Get link
- X
- Other Apps
மார்ச் மாத இறுதிக்குள்.. தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு.. அமைச்சர் போட்ட அதிரடி அறிவிப்பு.!!! தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுவதும் நடத்தி முடிக்க வேண்டுமென பள்ளிகல்வித்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக அதிகரித்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புக்கள் நடைபெற்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு இந்த நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நடத்தப்படுமா? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு கால அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது, 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ
- Get link
- X
- Other Apps
மே மாதம் வரை பள்ளிகள்: அரசின் முடிவை பரிசீலனை செய்ய ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரை வேலை நாள் என்பதை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆகியவற்றில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளி வேலை நாள்களாகும். மேலும், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் செய்முறைத்தேர்வு நடத்தப்படும். 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 30ஆம் தேதி வெளியிடப்படும். 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரையில் பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் பள்ளிகளைத் திறந்து நடத்தினால் மாணவர்களுக்குப் பல்வேறு நோய்த் தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும்