சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் Click here download syllabus Click here tamil model question paper Click here General knowledge model question paper Click here psychology model question paper
Posts
Showing posts from March 5, 2022
- Get link
- X
- Other Apps
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி, மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மனநிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும்.கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறினார்.
- Get link
- X
- Other Apps
பிளஸ் 1க்கும் திருப்புதல் தேர்வு அறிவிப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில், பிளஸ் 1 மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வை, அரசு தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை, இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்கட்டம் பிப்ரவரியில் முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்வு இந்த மாதம் துவங்க உள்ளது. ஆனால், பிளஸ் 1க்கு இதுவரை எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. மேலும், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள், கடந்த ஆண்டு 10ம் வகுப்பிலும் பொதுத் தேர்வு எழுதாமல், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர். எனவே, அவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில், திருப்புதல் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதன்படி, பிளஸ் 1 திருப்புதல் தேர்வு ஏப்., 5ல் துவங்க உள்ளது. ஏப்., 5, 6, 7, 8, 1...
- Get link
- X
- Other Apps
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்.. காலிப்பணியிடங்கள் விரைவில்?. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் ரேஷன் அட்டை வாயிலாக மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் ரேஷன் அட்டை முக்கியமான ஆவணமாக பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 4 மாதத்திற்கு முன்னதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஆகவே ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். தமிழகம் முழுவது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் 23,502 முழு நேர ரேஷன் கடைகள் மற்றும் 9639 பகுதி நேர நியாய விலை கடைகள் என்று மொத்தம் 33,141 கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக சட்டப் பேரவையில் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப்பணியிடங்களுக்கு முன்பே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய...
- Get link
- X
- Other Apps
சப்-இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்கள்.. மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி இதற்கான தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
TN TRB இளநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு ரத்து?.. அரசு எடுக்கும் முடிவு என்ன?..!!!!! தமிழகத்தில் சென்ற 4 தினங்களாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்று TN TRB வெளியிட்ட அரசாணையை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறியதாவது, TN TRB வெளியிட்ட அரசாணை சமூகநீதிக்கு எதிரானது என்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல்4-வது நாளாக மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அரசு முன்வராதது ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது வெயிட்டேஜ் முறையை விட கொடுமையானது. இந்த போராட்டம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வேலைக்கு இரண்டு தேர்வா, இது நியாயமா என்று கேள்வி எழுப்பி...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பணிக்கு மீண்டும் நியமன தேர்வு வேலை இல்லாதோரின் வயிற்றில் அடிப்பு: மாநில பொது செயலாளர் அதிருப்தி தேனி:'ஆசிரியர் பணிக்கு மீண்டும் நியமன தேர்வு நடத்தி வேலையில்லாத ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கும் அரசாணை 149ஐ ரத்து செய்ய வேண்டும்' என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் மயில் அதிருப்தி தெரிவித்துள்ளார். மாநில பொது செயலாளர் கூறியதாவது: கடந்த 2013ல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 9 ஆண்டுகளாக பணி வழங்க வில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெற முடியாமல் தவிக்கும் ஆசிரியர்களை பணியில் நியமிக்க வேண்டும்.வேலை வாய்ப்பு முன்னுரிமை பின்பற்றாமல், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றததையும் கணக்கில் கொள்ளாமல் ஆசிரியர் நியமனத்திற்கென மீண்டும் நியமன தேர்வு எழுத அரசாணை 149 வெளியிடப்பட்டுள்ளது. இது அநீதி. இதை ரத்து செய்ய வேண்டும். எந்த ஒரு அரசு பணிக்கும் இதுபோல் பல தேர்வுகள் நடத்தவில்லை. இது வேலையில்லாமல் தவிக்கும் ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கும் செயல்.அரசு பள்ளிகளில் ஆயிரக்க...