வினாத்தாள் லீக் விவகாரம்.. இனி இப்படிதான்.. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி ப்ளான்...!!!!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் "லீக்" ஆகாமல் தடுப்பதற்கு 3வகை வினாத்தாள்கள் தயாரிக்க பள்ளிக்கல்விதுறை முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. அப்போது பல்வேறு பாடங்களுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே "லீக்" ஆனது. தற்போது 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 முடிவடைய இருக்கிறது. இத்தேர்வில் வினாத்தாள்கள் லீக் ஆகாமல் தடுக்க பள்ளிக்கல்விதுறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது 3 விதமான வினாத்தாள்களை தயாரித்து கடைசி நேரத்தில் எந்த வினாத்தாளை வழங்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒருவேளை ஒரு வினாத்தாள் லீக் ஆனால், மாற்று வினாத்தாளை தேர்வில் வழங்க முடிவு செய்துள்ளனர். அதே நேரம் 3 வகை வினாத்தாள்களும் ஒரே நேரத்தில் வெளியாகாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற
Posts
Showing posts from March 4, 2022
- Get link
- X
- Other Apps
TNPSC Group- I & IIA தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்.! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.! தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயணடையும் வகையில் TNPSC Group- I & IIA 2022 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Group- I & IIA 2022) 5413 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளதால் போட்டித்தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தண்ணார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் தன்னார்வ பமிலும் வட்டத்தில் போட்டித்தேர்விற்கு, ‘தேவையான சமச்சீர்கல்வி பாடப்புத்தகம் மற்றும் புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்
- Get link
- X
- Other Apps
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று நடைபெறுதல்- கூட்டப் பொருள் அனுப்புதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வருகின்ற 08.03.2022 அன்று கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( அசிம் பிரேம்ஜீ பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்குபெறும் மாவட்டக் கல்வி அலுவலர்களை தவிர்த்து ) உரிய விவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. All ceo meeting proceedings -click here
- Get link
- X
- Other Apps
" எஸ்.ஐ. பணியிடத்திற்கு மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்"- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நேற்று (03/03/2022) வெளியிட்டிருந்த அறிவிப்பில், "காவல்துறையில் காலியாகவுள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) (ஆண், பெண் மற்றும் திருநங்கை) பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிக்கை எண்:01/2022-ஐ 08/03/2022 அன்று வெளியிடப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிக்க துவங்கும் நாள்: 08/03/2022. இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07/04/2022. இவ்வாரியம் முதன்முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வை அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நடத்தவிருக்கிறது. இவ்வாரியத்தில் 08/03/2022 முதல் 07/04/2022 வரை கட்டுப்பாட்டு அறையில் 'உதவி மையம்' வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும். இதேபோன்று உதவி மையங்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட காவல் கண்