Posts

Showing posts from March 3, 2022
Image
  இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி ஒழுக்கக்கல்வி நடத்துவார்கள்? சாட்டையை சுழற்றும் நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம்.! ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிட மாறுதல் ஏற்படுகிறதா? 10 லட்சம் ரூபாய் முதல் கொடுத்து பணியிடமாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எந்த வகையில் ஒழுக்க கல்வியை கற்பிப்பார்கள்?என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில், "லஞ்சம் கொடுப்பதன் அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலமாக இடமாறுதல் செய்யப்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இடம் மாறுவதற்காக ஆசிரியர்கள் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. கலந்தாய்வில் வெளிப்படை தன்மை கிடையாது" என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள், "இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் ஆசிரியர் பணியிடை மாற்றத்தின்போது நேர்மையான முறையில் நடைபெறவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் வீர
ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மீள நடத்த கால அட்டவணை வெளியீடு. பள்ளிக் கல்வி - 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான கலந்தாய்வு - நிருவாகக் காரணங்களுக்காக பள்ளிக் கல்வி ஆணையரக மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தமை - மீள கலந்தாய்வு நடைபெறுதல் சார்பு . Click here councelling timetable
  ஒரு வேலைக்கு இரு தேர்வு நியாயமா? தமிழக அரசுக்கு ராமதாஸ் வைக்கும் வேண்டுகோள்!! இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற சமூகநீதிக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் சென்னை பள்ளிக் கல்வி இயக்குனர் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நான்காவது நாளாக அவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தக்கூட அரசு முன்வராதது ஏமாற்றமளிக்கிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலும், பின்னர் 10-ஆம் வகுப்பு வரையிலும் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு தொடக்
Image
  "பாடம் நடத்த டீச்சர் இல்லை" அரசுப் பள்ளியின் அவலநிலை.. கதவை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்..!!! பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் செயல்பட்டு வருகின்றது. இப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் கல்வி தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் சேதம் அடைந்திருந்த 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால் இதுவரை கட்டிடங்கள் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் மாணவர்களை மரத்தடியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. அதோடு பள்ளியின் அருகில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. அதுமட்டுமல்லாது தரமற்ற சத்துணவு மாணவர்களுக்கு வழங்கப
Image
  தொழிற்கல்வி பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் சேர்க்கப்படாது - பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் திறனை மேம்படுத்தும்10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிப்பு. இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறுகையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல் 500 மதிப்பெண்களுக்கே கணக்கீடு செய்யப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல. தொழிற்கல்வி பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் மதிப்பெண்ணில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் 10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி அறிவிக்கப்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது. இதுவரை பிளஸ் 2 தொழிற்கல
Image
  எங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம்’: கதறும் ஆசிரியர் தேர்வர்கள்! ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களுக்குப் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் எனத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.   இந்த நிலையில், 2013ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களுக்கு பணி நியமனம் வழங்கக் கோரி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில், கடந்த 28ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின
  தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பணி நியமனம் பெற்றவர்கள் எண்ணிக்கை விவரம் வெளியீடு!! Click here TNTET passed details
Image
  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ( டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்கள்: 29 சம்பளம்: ரூ.56,100 - ரூ.2,05,700 வயது: 32க்குள் பதிவு கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ.200 தேர்வு நடைபெறும் நாள்: மே.28 விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 26 மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
  புதிய கல்வி கொள்கைப்படி பொது தேர்வில் மாற்றம் சென்னை:புதிய கல்வி கொள்கைப்படி, திறன் வளர்ப்புக்கான கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள், பள்ளி பொதுத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை, அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு, மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. இதற்காக, மத்திய அரசு சார்பில் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், கூடுதலாக திறன் வளர்ப்பு தொழிற்கல்வி பாடத்துக்கான, தேர்வு தேதிகள் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை, பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே, தொழிற்கல்வி பாடங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முதல், மற்ற பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கூடுதலாக, தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அதேபோல், 10ம் வகுப்புக்கு இதுவரை தொழிற்கல்வி பாடமும், அதற்கான தேர்வும் கிடையாது. பிற மாநிலத்தவருக்கான விருப்ப மொழி பாடம் மட்டுமே கூடுதலாக இடம்பெறும். இந்த ஆண்டு முதல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப மொழி பாடம் மட்டுமின்றி, கூடுதலாக தொழிற
Image
  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல் சிவகங்கை : 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் எஸ்.மயில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 2013 முதல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 9 ஆண்டாக பணி நியமனம் இல்லை. 2012ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோரை மட்டுமே பணி நியமனம் செய்துள்ளனர். எனவே இவர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்திற்கு பல கட்ட தேர்வு நடத்தும் அரசாணை எண் 149 ஐ ரத்து செய்ய வேண்டும்.தமிழகத்தில் அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடம் ஆயிரக்கணக்கில் உள்ளன. அப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கொரோனா காலத்திற்கு பின் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளன. அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடமும் அதிகளவில் நிரப்ப வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்