Posts

Showing posts from March 2, 2022
  10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஒரே PDF files இல் Click here 10,11,12th timetable
  12   ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை கிழே உள்ள லிங்க் click செய்யவும்  12th public exam timetable
 11  ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை கிழே உள்ள லிங்க் click செய்யவும்  11th public exam timetable
  10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை கிழே உள்ள லிங்க் click செய்யவும்  SSLC public exam time table
Image
  1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்.. அதிரடி அறிவிப்பு...!!!! தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையில் மாணவர்களின் கல்வி திறனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு மே 13-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்..
Image
  10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11,12 - செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 25 - மே 2 வரை நடைபெறும். 10- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 6 - மே 30 வரை நடைபெறும் 12- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 5 முதல் - மே 28 வரை நடைபெறும் 11- ஆம் வகுப்பு கால அட்டவணை : மே 9 - மே 31 வரை நடைபெறும் Result : தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி  +2 - ஜூன் 23 11 - ஜூலை 7 10 - ஜூன் 17 20.06.2022 முதல் வகுப்புகள் வழக்கமாக தொடங்கும்
Image
  வீட்டுப்பாடம் செய்ய நேரமில்லை! இல்லம் தேடி கல்விக்கு குறையுது வருகை கோவை : பள்ளிகளில் வழங்கப்படும் வீட்டுப்பாடங்களை செய்ய நேரமில்லை என்பதால், இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களுக்கு வரும் மாணவர்களின் வருகை குறைந்து விட்டதாக, தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலங்களில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் மத்தியில், கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. இதனை சரிசெய்யும் நோக்கில், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. கோவையில் இதுவரை 5,800 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.ஜன., மாதம் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பிப்., 1ல் பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் தற்போது வரை, மாணவர்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இதுகுறித்து, தன்னார்வலர் ஒருவர் கூறுகையில், 'ஜன., பிப்., மாதங்களை ஒப்பிடுகையில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளது. தொடர்ந்து வராமல் உள்ள மாணவர்களை சந்தித்து கேட்டபோது, பள்ளி முடிந்தததும் மீண்டும் மையத்திற்கு வருவது சிரமமாக உள்ளதாக தெரிவித்தனர். பள்ளிகளில் கொடுக்கும் வீட்டு பாடங்களை முடிக்க ...
Image
  TET - தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்! ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 5 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி கடந்த 28-ஆம் தேதி முதல் சென்னை DPI வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 5 அம்ச கோரிக்கை : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான " மறு நியமனத் தேர்வு ” என்ற அரசாணை 149 ஐ நீக்கம் செய்ய வேண்டும். கடந்த " 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கை - 177 ஐ " உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 9 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் காலிப்பணியிடங்களை , ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். பின்னடைவு காலிப்பணியிடங்கள் மற்றும் கடந்த 8 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பப்பட வேண்டும். தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் அதிகரித்து கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப , அதற்கான புதிய காலிப்பணியிடங்களை உருவாக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீடு " முறையை சர...
  பணிச்சுமையால் திணறும் ஆசிரியர்கள்; கற்பித்தல் பணி பாதிக்கும் என கருத்து பல்லடம் : கூடுதல் பணிச்சுமையால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. கொரோனா தொற்று பரவ காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுக்கு மேல் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.தொற்று பரவல் குறைந்து, பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட துவங்கியுள்ளன. தற்போது, கூடுதலாக இதர பணிகள் வழங்கப்படுவதால், பணிச்சுமை ஏற்பட்டு கற்பித்தல் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:அரசு சார்ந்த எந்த ஒரு பணியாக இருந்தாலும், முதலில் ஆசிரியர்களே கூடுதல் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். கற்பித்தல் பணி மட்டுமன்றி, ஆண்டுதோறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம்.தகவல்களை சேகரித்து வைக்கும், 'எமிஸ்' தளத்தில், மாணவர்களின் வயது, எடை, உயரம் உள்ளிட்ட விவரங்களை அவ்வப்போது பதிவிட வேண்டும். பள்ளி நுாலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்...
  அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொண்டி அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது.தொண்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் (மேற்கு) போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து இப் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அகமதுபாய்ஸ் கூறியதாவது- 255 மாணவ, மாணவிகள் படிக்கும் இப் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர்.இதே போல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியர் உட்பட கணினி மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.