07.03.2022 - விழுப்புரம் மாவட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! மேல்மலையனூர் தேரோட்டத்தினை முன்னிட்டு 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகின்ற 7.03.2022 அன்று தேர் திருவிழா நடைபெறுவதால் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மோகன் அறிவிப்பு.. உள்ளூர் விடுமுறை அளிக்கபட்ட தினத்திற்கு பதிலாக 19.03.2022 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from March 1, 2022
- Get link
- X
- Other Apps
TNPSC குரூப் 2 / 2A தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for TNPSC Group 2 / 2A exam? தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் இரண்டு வருடங்களாக எதிர்பார்த்திருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்வில் வெற்றிபெறுபவர்கள் மூலம் நிரப்பப்படவிருக்கும் பல்வேறு பணிகளுக்கு என 5,529 இடங்கள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் 23-ம் தேதி வரை ஆன்லைனில் தேர்வுக்கு அப்ளை செய்வதற்கு காலம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் மிக முக்கியத் தேர்வாக இது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை இங்கு பார்க்கலாம். கையில் வைத்திருக்க வேண்டிய, அல்லது கணினியில் soft copy ஆக வைத்திருக்க வேண்டியவை ஆவணங்கள்: - போட்டோ - கல்விச் சான்றிதழ்கள் - வகுப்புச் சான்றிதழ் - கையொப்பம் - தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் ஸ்டெப் 1: * தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளை TNPSC (Tamil Nadu Public Service Commission) நடத்துகிறது. TNPSC-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஸ்டெப் 2: * One Time Registration(...
- Get link
- X
- Other Apps
TET தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களை நேரடியாக பணி நியமனம் செய்க : போட்டித் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேறு போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய நிலை இருப்பதால் ஆசிரியர் பணித் தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அல்லலுற்று வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நியமனத் தேர்வு முறையை ரத்து செய்யாமல் காலம் கடத்தும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், இரண்டாம் தாள் பட்ட...
- Get link
- X
- Other Apps
Group 4 தேர்வுகளுக்கான அட்டவணை இம்மாதம் வெளியீடு - TNPSC தலைவர் பாலசந்திரன் டிஎன்பிஎஸ்சி (TNPSC) நடத்தும் குரூப்- 4 பணியிடங்களுக்கான தேர்வு அட்டவனை இம்மாதம் வெளியாக உள்ளது என நெல்லையில் ஆணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குரூப் 2, 2a தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு தற்போது அதற்காக தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள் விடைத்தாள் வைக்கும் கருவூல அறைகளை ஆய்வு செய்தார் . தொடர்ந்து ஆணையத்தின் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஓ.எம்.ஆர் மூலம் தேர்வு எழுதுவதால் ஏற்படும் தவறுகளை முழுவதும் களைய TNPSC பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வின்போது ஓஎம்ஆர் படிவத்தில் இருந்த தனிநபர் தகவல்கள் தேர்வு அறையிலையே பிரித்து எடுக்கப்படுவதால் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்விற்கான விடைத்தாள் கொண்டுவரும் வாகனங்களில் முறைகேடு நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் ...
- Get link
- X
- Other Apps
டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,பிற அரசு அலுவலர்களுடன் ஒப்பிடும்போது அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது.இவ்வாறு இருக்க டியூசன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல் பரவி வருகிறது என்றும் இது பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிக்கிறது என்றும் உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தனது பணியிட மாறுதலை எதிர்த்து ,தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இத்தகைய உத்தரவையும் கருத்தையும்...
- Get link
- X
- Other Apps
உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா?- ராமதாஸ் கேள்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி முதல் நிலைத் தேர்வுகளில் கேட்கப்பட்ட தவறான வினாக்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை முதன்மைத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட, அதை மதித்து செயல்படுத்த டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மறுத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான போட்டித் தேர்வர்களின் வாழ்க்கையை சூனியமாக்கும் வகையிலான பணியாளர் தேர்வாணைய நிர்வாகத்தின் முடிவு கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வர்கள் நலனில் அக்கறையில்லாத போக்காலும், தொலைநோக்குப் பார்வையின்மையாலும் முதல் தொகுதி தேர்வு எழுதும் மாணவர்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக தேர்வாணையத்தின் அதிகாரிகளுக்கு நினைவூட்டியும் கூட, தவறுகளை சரி செய்ய ந...
- Get link
- X
- Other Apps
காவலர் தேர்வு எழுதுவோரின் கவனத்திற்கு..! கட்டாயம் இந்த மதிப்பெண் எடுக்க வேண்டும்..! காவல்துறைக்கான மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதால், காவலர் பணியிடங்களுக்கான விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த தேர்வு நடத்தி காவலர் மற்றும் உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. ஆரம்பத்தில் விருப்பம் மொழிப் பாடங்களை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தாள் தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த முதல் தாளில் குறைந்தது 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். காவலர் தேர்வு 2ஆம் தாள் வழக்கம்போல் 50 பொது அறிவு வினாக்களும் 30 உளவியல் பிரிவு வினாக்களும் இடம்பெறும். இதில் முதல் தாளில் 40 மதிப்பெண் பெறவில்லை என்றால், இரண்டாம் தாள் திருத்தப்படமாட்டாது என அறிவி...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் நியமன தேர்வு ரத்து செய்ய போராட்டம் ஆசிரியர் தகுதி தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வேறு போட்டி தேர்வுகள் இல்லாமல், நேரடியாக பணி நியமனம் வழங்கக்கோரி, பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், இதுவரை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இந்நிலையில், எதிர்காலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நியமன தேர்வு என்ற போட்டி தேர்வு நடத்தி, அதன் மதிப்பெண்கள் அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கம் சார்பில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று முதல் தொடர் உண்ணாவிரதம் துவங்கப்பட்டுள்ளது. நுாற்றுக்கணக்கான பட்டதாரிகள் பங்கேற்று உள்ளனர். ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி தேர்வுக்கான அரசாணை, அ.தி.மு.க., ஆட்சியின் போது பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு ரத்து செய்யப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கை...
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வர்களே!.. தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!!!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசுத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக எந்தவிதமான போட்டித் தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022ஆம் வருடத்திற்கான அரசு போட்டித் தேர்வுகள் தொடர்பான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வருடம் 32 வகை போட்டித் தேர்வுகளானது நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியது. அதில் மார்ச் 23ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதையடுத்து மே 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தற்போது குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 1 தேர்வு துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் து...