கேந்திரியா பள்ளி அட்மிஷன் வயது வரம்பு திடீர் உயர்வு. கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய கல்வி அமைச்சகத்தின், தன்னாட்சி பெற்ற அமைப்பாக உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ், நாடு முழுதும் கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன.ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர்,ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது, அந்த ஆண்டு மார்ச், 31 அல்லது ஏப்., 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி, பல ஆண்டுகளாக உள்ளது. வரும், 2022- - 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை, கே.வி.சங்கதன் நேற்று வெளியிட்டுள்ளது.அதில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள்,புதிய கல்வி கொள்கையின்படி, 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.இதில் மாணவர்களுக்கு ...
Posts
Showing posts from February 27, 2022
- Get link
- X
- Other Apps
PG-TRB- தேர்வு எழுதியவர்களுக்கு புது தகவல் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று TRB அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தேர்வானது பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தம் 2,207 காலியிடங்களுக்கு இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. 190 தேர்வு மையங்களில் இரண்டரை லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்களுக்கு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதில், தேர்வுக்கான விடைகள் மற்றும் தேர்வு மதிப்பெண்கள் ஒரு வாரத்திற்குள் இணையத்தில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இதனால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதிய தேர்வர்கள் அனைவரும் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை கவனமாக பின்தொடருமாறு கூறியுள்ளார். மேலும், இந்த தேர்வும் தேர்ச்சி அடைந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மார்ச் மாதத்திற்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
பிறந்த நாள் அறிவிப்பாக பணிநிரந்தரம் செய்ய வேண்டுகோள் வரும் மார்ச் 1 ந்தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகிறது. அன்று 12ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: மக்கள் நலன், வளர்ச்சி திட்டம் என சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதல்வர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ந்தேதியை பகுதிநேர ஆசிரியர்கள் இல்லங்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்ளோம். பணி நிரந்தரம் செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதியை இந்த இனிய நாளில் நிறைவேற்றி, 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு அடையாளமாக இருக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்று வெகுவாக எதிர்பார்த்து வருகின்றனர் பகுதிநேர ஆசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Get link
- X
- Other Apps
TNPSC - ஆதார் இணைக்க தேர்வர்களுக்கு அவகாசம் அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் ஒரு முறை நிரந்தர பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணை இந்த மாதம், 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு, நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.எனவே, மார்ச் 23க்கு முன் தங்களின் ஆதார் எண்ணை, நிரந்தர பதிவுடன் இணைக்க வேண்டும். மற்ற தேர்வர்கள், ஏப்., 30க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஏற்கனவே ஆதார் எண் இணைத்தோர், மீண்டும் இணைக்க தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
தமிழில் கையெழுத்திடும் முறை பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவு. மாணவர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என, தொடக்க பள்ளிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி முதல் கல்லுாரி காலம் வரை, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முதலில் மாணவர்களின் பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானது என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தமிழில் பெயர் எழுதும்போது, அதன் முன் எழுத்தான இனிஷியலையும், தமிழில் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டு வர வேண்டும் .பள்ளியில் சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லுாரிகளில் படிப்பை முடித்து பெறும் சான்றிதழ்கள் வரை, அனைத்திலும் தமிழ் முன் எழுத்துடன் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.மாணவர்கள் தங்கள் கையெழுத்துகளை தமிழ் முன் எழுத்துக்களுடன் கையொப்பமிடவும் அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை,...
- Get link
- X
- Other Apps
தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு.. மார்ச் 1 கடைசி நாள்.. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு..!!!! தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் அரசு வேலைக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு சில பணிக்கு பதிவு செய்துள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இருப்பினும் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் முடிவடைந்தது. இருப்பினும் மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி 2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு 1.1.2014 முதல் 31.12.2019 வரை பதிவை புதுப்பிக்க வேண்டிய காலம் இருக...
- Get link
- X
- Other Apps
இல்லம் தேடி கல்வி 6,868 மையங்கள் திருப்பூர்:எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளும் துவங்கிய நிலையில், இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கீழ், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.ஊரடங்கால், கற்றல் திறன் குழந்தைகளுக்கு வெகுவாக குறைந்துள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட சரளமாக வாசிக்கவும், எழுதவும் சிரமப்படுகின்றனர். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த கற்றல் இடைவெளியை குறைக்க, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ''திருப்பூரில் இத்திட்டம் துவங்கும்போது, 1,416 மையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது,எல்.கே.ஜி., முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தன்னார்வலர்கள் அதிக ஆர்வம் காட்டத்துவங்கினர். தற்போது, 6,868 மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 7 ஆயிரம் மையங்கள் அமைக்க வேண்டும் என்பது இலக்கு. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்வியாளர்கள் முன்வந்தால், இலக்கை எளிதாக அடைய முடியும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவியா...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் 9494 ஆசியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்காக 2022-ம் வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், 3902 இடைநிலை ஆசிரியர், 1087 பட்டதாரி ஆசிரியர் என்று மொத்தம் 4989 காலியிடங்கள் இருக்கின்றன. இவர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஜூன் 2-வது வாரத்தில் போட்டி தேர்வு நடைபெறும். இதையடுத்து போட்டி தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 167 விரிவுரையாளர் பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு ஜூன் 2-வது வாரம் தேர்வு நடத்தப்படும் மற்றும் இதற்கான அறிவிப்பு மே மாதத்தில் வெளியாகும். அதோடு மட்டுமல்லாமல் 1334 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் ...
- Get link
- X
- Other Apps
குரூப்-2, 2-A தேர்வு.. வேலை தேடுவோருக்கு இன்ப அதிர்ச்சி.. சூப்பர் அறிவிப்பு.!!!!! வீட்டிலிருந்தே அரசு தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வகையிலான புதிய வழி ஒன்று வேலைவாய்ப்பு துறையினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, தேர்வர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே தேர்வுக்கு தயார்படுத்தும் முறையில் ஆன்லைனில் உரிய இணையதளம் வாயிலாக பயிற்சியளிக்க உரிய வழிமுறைகளை வேலைவாய்ப்புத்துறையினால் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும் இந்த இணையதளத்தில் காணொளிக்காட்சி, மின்னணு பாடக்குறிப்புகள், மின் புத்தகங்கள்,போட்டி தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் மாதிரி வினாத்தாள் போன்றவை இடம்பெற்றுள்ளதாக கூறினார். இதனைத் தொடர்ந்து இந்த இணையதளத்தில் இணைய, தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண் கொடுத்து உ...