கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு; மத்திய அரசின் கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு Entry Requirements in National Education Policy: பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய உயர்க்கல்வித் தகுதி கட்டமைப்பின் வரைவில் (Draft National Higher Education Qualification Framework) இடம் பெற்றுள்ள முதல் நிலைத் தகுதிகளுக்கு (Entry Requirements) கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேசியக் கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாட்டை கோரும் மத்திய அரசின் மின்னஞ்சல், தமிழக அரசால் 18.02.2022 அன்று பெறப்பட்டது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தினைப் பெற்று விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. எனவே வரைவு செயலாக்கத்திட்டம் (Draft Implementation Plan) குறித்து ஆய்வு செய்து விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். Entry Requirements in National Education Policy - வரைவின் அம்சங்கள் 22.02.2022 அன்று, தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளி
Posts
Showing posts from February 24, 2022
- Get link
- X
- Other Apps
மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 5529 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வார்வாணையம் (டிஎன்பிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளில் அடங்கிய 5529 பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வுக்கு மார்ச் 23ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்கள் அடிப்படை விவரங்களை இணைய வழி நிரந்தப்பதிவு(OTR) மூலமாக கட்டாயப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு 5 வருடங்களுக்கு செல்லத்தக்கது. அதன்பிறகு உரிய பதிவுக் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வுக்கான பதவிகளை பொருத்தவரையில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் நடக்கும். இதன்படி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் 11, நன்னடத்தை அலுவலர் 2, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் 19, பதிவுத்துறையில் சார்பதிவாளர் கிரேடு(2) 17, இ