தமிழக பள்ளி ஆசிரியர்களே!.. மார்ச் 1 ஆம் தேதி.. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு...!!!! தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. தற்போது எனினும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பிப்.1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 23ஆம் தேதி (இன்று) வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்கள் வரும் 28ஆம் தேதி பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். மேலும் அனைவரும் புதிய இடங்களில் மார்ச் 1ஆம் தேதி பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Posts
Showing posts from February 23, 2022
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்களின் ஊதிய சிக்கலைத் தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்திய புதிய முறை! பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கலைத் தவிர்த்திடும் பொருட்டு உரிய ஆணைகள் பெற்ற அனைத்துவகை ஆசிரியர்களும் பிப்ரவரி 28ஆம் தேதி மாலையில் பணி விடுப்பு செய்து, மார்ச் 1ஆம் தேதி பணியில் சேர வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு முழுவதும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை என்ற இணையதளத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இன்று (பிப்.23) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2021-22ஆம் கல்வியாண்டிற்கு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அரசின் நெறிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக ஆசிரியர்களுக்கு மாறுதல்கள், பதவி உயர்வுகள், பணிநிரவல் கால அட்டவணை வெளிய...
- Get link
- X
- Other Apps
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு வெளியீடுடிஎன்பிஎஸ்சி குரூப்1 முதன்மை தேர்வு சென்னையில் மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அந்த ஹால் டிக்கெட்டுகளை தவறாமல் தேர்தலின்போது கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
அரசு நிர்வாகத்தை உயர்நீதிமன்றம் நடத்த முடியாது!: சமச்சீர் கல்விக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! ஜெ.ஜெ. கட்சி என்ற அமைப்பின் நிர்வாகி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். மனுவில், தமிழக மாணவர்கள் உயர்கல்வி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளை எதிர்கொள்வதற்கு நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வு ஆகியவற்றை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு வடிவமைக்கும் பாடத்திட்டத்தின் படியே நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மத்திய இடைநிலை கல்வி வாரியம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் மூலமாக பாடத்திட்டம் உருவாக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோரது பிள்ளைகள் நடுவன கல்வி வாரியத்தில் கல்வியும், அரசுக்கு வரி செலுத்தாத மக்கள் சமச்சீர் கல்வி முறையும் பின்பற்றப்படுகிறது. இருவேறு கல்வ...
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்.. என்னென்ன பாடத்திட்டம்?... வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அனைத்து துறைகளுக்குமான ஊழியர்களை போட்டி தேர்வுகள் மூலம் நியமனம் செய்து வருகிறது. பதவிகளின் பணி நிலையை பொறுத்து தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கிறது. அதில் மிகவும் அடிப்படை கல்வியான 10ஆம் வகுப்பு கல்வித்தகுதியில் அதிக நபர்கள் கலந்துக்கொள்ளும் குரூப் 4, விஏஓ தேர்வு குறித்த எதிர்ப்பார்ப்பு நீண்டு வருகின்றது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட உள்ளதாக அண்மையில் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 4 தேர்வின் வாயிலாக இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய 7 பணியிடங்கள் நிரப்பப்படும். தட்டச்சர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதை...
- Get link
- X
- Other Apps
எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு மார்ச் 17 வரை விண்ணப்பம் பொது மேலாண்மை படிப்பான எம்.பி.ஏ.,வில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கு, மார்ச் 17க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், பட்டப் படிப்பு முடித்தவர்கள், மேலாண்மை பாடத்திற்கான எம்.பி.ஏ., முதுநிலை படிப்பில் சேர்வதற்கு, தேசிய தேர்வு முகமை வழியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 'சிமேட்' என்ற இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, 'ஆன்லைனில்' துவங்கி உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள், மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க விரும்பும் பட்டதாரிகள், இந்த தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, cmat.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- Get link
- X
- Other Apps
' நீட் தேர்வை விட கொடுமையானது'- தேசிய கல்விக் கொள்கைக்கு அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை விட கொடுமையானது என்பதால், உயர் கல்வியில் தற்போது உள்ள நடைமுறையை மாற்றக்கூடாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வரைவு தேசிய உயர் கல்வித் தகுதிகள் மற்றும் கட்டமைப்பு குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்கி அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி எனும் தமிழக அரசின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தொடர்ந்து எதிர்த்து வருவதாக கூறியுள்ளார். கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பது எளிய மாணவர்களின் உயர் கல்வியைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை என பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். இது தடுக்கப்பட வேண்டுமென்றும், உயர்கல்வியில் தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும், இது விளி...
- Get link
- X
- Other Apps
முக்கிய அறிவிப்பு...இன்று முதல் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - லிங்க் இதோ! குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு இன்று (பிப்.23 ஆம் தேதி) முதல் மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை கீழ்க்கண்ட டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். பிப்.23 ஆம் தேதி முதல் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.இது தொடர்பாக,அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பிப்.23 ஆம் தேதி முதல் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.மார்ச் 23 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள். இதனையடுத்து, குரூப் 2-இல் 116 காலிப் பணியிடங்களுக்கும் ,குரூப் 2A நிலையில் 5413 பணியிடங்களுக்கும் மே மாதம் 21 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A போட்டித் தேர்வுகள் நடைபெறும் குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுகளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடை...