மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு - பணியாளர் தேர்வு ஆணையம் மத்திய அரசின் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுக்கு, விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 7. கல்வித் தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி. தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Posts
Showing posts from February 20, 2022
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதுரைக்கிளை உத்தரவு தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் நடத்தைகளை பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளது.
- Get link
- X
- Other Apps
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு... இன்றுடன் (பிப்.20) நிறைவு...!!! ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 2,207 பேரை நியமிக்கும் வகையில் போட்டி தேர்வை நடத்துகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கால அட்டவணைப்படி பி.எட்., எம்.எட்., படித்த வெளி மாவட்டங்களில் வசிக்கும் பட்டதாரிகள் கடந்த 12 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டி தேர்வுகளில் பங்கேற்று தேர்வினை எழுதி வருகின்றனர். மேலும் தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்டிருந்த அடையாள அட்டையின் நகலை எடுத்துச்செல்வது, தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருப்பது, முககவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எனவே முதுகலை ஆசிரியர்...
- Get link
- X
- Other Apps
TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன? தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஆண்டு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5, 413 காலியிடங்களும் உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு மே மாதமும், பிரதானத் தோ்வு செப்டம்பரிலும் நடைபெறவுள்ளதாக ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தோ்வுக்கான முடிவுகள் ஜூனிலும், பிரதானத் தோ்வுக்கான முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும். தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5,413 காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பாணை வரும் 23 ஆம் தேதி தமிழ்...
- Get link
- X
- Other Apps
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்.. வயது வரம்பு, கட்ஆஃப் & முக்கிய தகவல்கள் இதோ..!!!! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வரும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். குரூப் 4 தேர்வில் பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், நிர்வாக அலுவலர், வரித்தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்ளிட்ட 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. ஒரே ஒரு எழுத்து தேர்வு முறையில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறும். மேலும் தமிழ் மொழி டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப்-4 தேர்வு வினாக்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்படுகின்றன. இருப்பினும் சில வினாக்கள்...
- Get link
- X
- Other Apps
தமிழக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு விடைத்தாள்.. ஆசியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!!! தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை ரத்து செய்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் 1 -12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு கடந்த வாரம் 10, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றது. இந்த திருப்புதல் தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. அதாவது, தனியார் பள்ளிகளில் இருந்து 10,12ஆம் வகுப்பு மாணவர்களின் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரனைகளும் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு மத்தியில் திருப்புதல் தேர்வானது முடிவடைந்துள்ளது. இதனிடையில் தினமும்...
- Get link
- X
- Other Apps
ஜிப்மரில் துணை மருத்துவ படிப்பு மார்ச் 14 வரை விண்ணப்பிக்கலாம் புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் பி.எஸ்சி.., நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு, அடுத்த மாதம் 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் 94 சீட்டுகள் உள்ளன. எம்.எல்.டி., ரத்த சேகரிப்பு, நியூரோ டெக்னாலஜி, நியூக்கிளியர் மெடிசன் டெக்னாலஜி, மெடிக்கல் ரோடியோலஜி இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட 9 பி.எஸ்சி., துணை மருத்துவ படிப்புகளில் 87 சீட்டுகள் உள்ளன.இப்படிப்புகளில் முதலாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 18ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான மாணவர்களின் பட்டியல் மார்ச் 21ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும்.பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் மொத்தமுள்ள 94 சீட்டுகளில் 9 சீட்டுகள் மாணவர்களுக்கும், 85 சீட்டுகள் மாணவிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.தேசிய தேர்வு முகமை நடத்திய யூ.ஜி., நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு ...