Posts

Showing posts from February 19, 2022
Image
  TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?.. OTR ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய.. ஈசியான வழிமுறைகள் இதோ..!!!! டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட உள்ளார். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் குரூப்-2 தேர்வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த குரூப்-2, குரூப் 2ஏ தேர்வு காலிப்பணியிடங்கள் முதன்மை தேர்வு, முதல்நிலை தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரபூர்வ வலைதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் "ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்" எனப்படும் ஒருமுறை பதிவு கட்டாயம் ஆகும். எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் OTR பதிவு செய்வது அவசியம் ஆகும். * டிஎன்பிஎஸ்சி login id மற்றும் P
Image
  வாரியங்கள்-சங்கங்கள் இனி நேரடி பணிநியமனம் செய்ய முடியாது: தோவாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் அறிவிப்பு தமிழக அரசின் புதிய சட்டம் காரணமாக, வாரியங்கள், சங்கங்கள் ஆகியன தாங்களாக இனி பணி நியமனங்களை மேற்கொள்ள முடியாது என அரசுப் பணியாளா் தோவாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளாா். மேலும், அதுகுறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் மாா்ச்சில் பணியாளா் தோவாணையம் வெளியிடும் என அவா் கூறினாா். இதுகுறித்து, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளா் சந்திப்பில் பணியாளா் தோவாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன் கூறியது:- மின்சாரம், வீட்டுவசதி உள்ளிட்ட வாரியங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியன தாங்களாக பணி நியமனம் செய்ய முடியாது. இதற்கான சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்து உத்தரவையும் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவது குறித்து பணியாளா் தோவாணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 15-இல் நடந்தது. இதில் அரசின் உத்தரவை எந்த வகையான முறையில் செயல்படுத்தலாம் என விவாதிக்கப்பட்டது. அதன்படி, அனைத்து வாரியங்கள், சங்கங்கள் ஆகியவற்றில் உள்ள பணியிடங்கள் வரையறுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரியம், சங்கங்களில்
  ஆறாவது முறையாக ஆசிரியர்கள் கலந்தாய்வு அட்டவணை திருத்தம்: தொடரும் குழப்பம் மதுரை:தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு அட்டவணை 6வது முறையாக திருத்தம் செய்யப்பட்டதால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.ஆசிரியர் நலன் கருதி ஆண்டுதோறும் நடத்தப்படும் மாறுதல் கலந்தாய்வு ஜன.24 முதல் துவங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் காரணமின்றி ஜன.27க்கு மாற்றப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி தேர்தல் பயிற்சி வகுப்பு, ஓட்டுப் பதிவுக்காக மேலும் இருமுறை திருத்தப்பட்டது.இதையடுத்து அங்கன்வாடி மையங்களுக்கு மாறுதல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் 2381 பேர் பள்ளி பணிக்கு மீண்டும் மாற்றும் பணிநிரவல் கலந்தாய்வு பிப்.16 ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.இதற்காக அன்று இரவு 10:30 மணி வரை ஆசிரியர்கள் காத்திருந்த நிலையில் 'எமிஸில்' ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் கடைசிநேரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐந்தாவது முறையாக திருத்தப்பட்ட நிலையில், பிப். 23ல் பணிநிரவல் கலந்தாய்வு நடக்கும் என 6வது முறையாக புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.திட்டமிடல் இல்லை தமிழ்நாடு ஆரம்ப ப