மாணவர்களை வைத்து நியமனம் செய்ய வேண்டும்.. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டம்.. விருதுநகரில் பரபரப்பு..!! மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பள்ளியின் முன்பு ஆரம்பம்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உபரி ஆசிரியர்களை நிர்ணயிக்க கடந்த 1.8.2021- ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஏனென்றால் கொரோனா பாதிப்பு காலமாக இருந்ததால் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்த நிலையில் கடந்த 1.11.2021 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டு என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Posts
Showing posts from February 18, 2022
- Get link
- X
- Other Apps
குருப் 2 நேர்காணலில் தேர்ச்சிபெறாதவர்களுக்குப் புதிய சலுகை! குரூப் 2 நேர்காணலில் கலந்துகொள்பவர்களுக்குச் சலுகை வழங்கப்படும் என அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் நமது செய்தியாளரிடம் பேசுகையில், "முன்பு குரூப் 2 தேர்வில், நேர்காணல் உள்ள பதவிகளுக்குத் தரவரிசை அடிப்படையில், நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்கள். நேர்காணலில் தகுதிபெறாவிட்டால், மீண்டும் தேர்வெழுதி, நேர்காணலில் தகுதிபெற்றால் மட்டுமே அவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். குரூப் 2 நேர்காணலில் தேர்ச்சிபெறாதவர்களுக்குப் புதிய சலுகை ஆனால் தற்போது, நேர்காணலில் தகுதிபெறாவிட்டால், குரூப் 2 ஏ நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் சேர்க்கப்பட்டு, கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். இந்த முறை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். மேலும் பொதுத் துறையில் காலியாகும் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதற்குத் தேவையான அளவிற்க...
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 , குரூப் 2Aதேர்வுகளுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தற்பொழுது குரூப்-2 மற்றும் குரூப்-2a ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி இந்த மாதம் இந்த அறிவிப்புகள் வெளியிடுவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மார்ச் 23ஆம் தேதி அன்று விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஆகும். இந்தப் போட்டித் தேர்வுகள் மே மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகின்றன. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த தேர்வுகளை இரண்டு வகைகளாக எழுதலாம். தமிழில் எழுத விருப்பமுள்ளவர்கள் தமிழில் 100 கேள்விகளும், பொது அறிவியல் 75 கேள்விகளும் ஆப்டிடியூட் டெஸ்ட் 25 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலத்தில் எழுத விரும்புபவர்களுக்கு பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகளும் பொது அறிவியல் 75 கேள்விகள் ஆப்டிடியூட் டெஸ்ட் 25 கேள்விகளும் கேட்கப்படும். இந்தக் கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண் 300 ஆகும். இந்த 300 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் அல்லாத பணியாளர்களை TNPSC மூலமாக நியமிக்க திட்டம்! பல்கலைகளில், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, தமிழக உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தை, அந்தந்த பல்கலைகளே மேற்கொள்கின்றன. இதில், இட ஒதுக்கீடு மற்றும் கல்வித்தகுதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், அனைத்து பல்கலைகளிலும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க பரிசீலனை நடக்கிறது. இதுதொடர்பாக, உயர்கல்வி துறை துணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் சார்பில், பல்கலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், அனைத்து பல்கலைகளும் தங்களின் ஆசிரியர் அல்லாத பணியாளர் விபரங்களை, உயர்கல்வி துறைக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது?.. அரசின் முடிவு என்ன?. லீக்கான தகவல்..!!!! தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. அப்போது அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த கல்வி ஆண்டின் நடத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதுமட்டுமல்லாமல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு ஜனவரி, மார்ச் மாதம் நடைபெறும் என்று கால அட்டவணை வெளியானது. ஆனால் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதன் காரணமாக 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து ஆகுமா என்று பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தொ...
- Get link
- X
- Other Apps
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ:5,500 காலியிடங்களுக்கான தோவு அறிவிக்கை இன்று வெளியீடு சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோவு அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. தோவாணைய வளாகத்தில் நடைபெறும் செய்தியாளா் சந்திப்பில் தோவு அறிவிக்கையை அதன் தலைவா் கா.பாலச்சந்திரன் வெளியிடுகிறாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தின் ஆண்டு திட்ட அறிக்கை சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்களும், குரூப் 2ஏ பிரிவில் 5, 413 காலியிடங்களும் உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கு முதல்நிலைத் தோவு மே மாதமும், பிரதானத் தோவு செப்டம்பரிலும் நடைபெறவுள்ளதாக ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தோவுக்கான முடிவுகள் ஜூனிலும், பிரதானத் தோவுக்கான முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்று அறிவிப்பு: ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி, குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான தோவு அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. தேர்வாணையத் தலைவா் கா.பாலச்சந...