TNPSC Group 2 தேர்வுக்கான தகுதிகள் என்ன, என்னென்ன பதவிகளில் வேலை கிடைக்கும்? தமிழகத்தில் குரூப் 2 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிக்கை இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்கள் உள்ளன. தகுதிகள் குரூப் 2 தேவை எழுத விரும்புவோர், ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு, இறுதித் தேர்வு மற்றும நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது 18. எஸ்.சி., எஸ்.டி., அருந்ததியர்கள், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து சமூகத்தை சேர்ந்த விதவைகள் ஆகியோர் தேர்வெழுத உச்சபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 30-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுடன், நேர்காணல் முறையில் நிரப்பப்படும் பணியிடங்கள் : 1. துணை வணிக வரி அதிகாரி 2. நகராட்சி ஆணையர், Grade-II 3. ஜூனியர
Posts
Showing posts from February 17, 2022
- Get link
- X
- Other Apps
TNPSC Press Meet | குரூப்- 2, 2ஏ தேர்வுகள்; டிஎன்பிஎஸ்சி நாளை முக்கிய அறிவிப்பு குரூப்-2, 2ஏ தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகளை மே மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்- 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப்- 4 தேர்வு குறித்து மார்ச் மாதத்தில் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும். தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர். அதேபோல தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு.. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. பீதியில் வடமாநில பணியாளர்கள்.!!!!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக சமீபத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இதனிடையில் மின் வாரிய பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களில் வட மாநிலத்தவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் பாடத்தை படிக்காமல் மின் வாரிய பணிக்கு தேர்வானவர்கள், பணியில் சேர்ந்ததில் இருந்து 2 வருடத்திற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த உத்தரவின்படி டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாத பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதற்க
- Get link
- X
- Other Apps
12ம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியான விவகாரம் போளூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு போளூர்: திருப்புதல் தேர்வு 12ம் வகுப்பு கணித வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக போளூர் ஆக்ஸீலியம் மெட்ரிக் பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு கடந்த 9ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் ஒரே மாதிரியாக அச்சிடப்பட்டு பொதுத்தேர்வு போல நடத்தப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்வுக்கான கணிதப்பாட வினாத்தாள் மற்றும் 10ம் வகுப்பு அறிவியல் பாட வினாத்தாள் ஆகியவை சமூக வலைதளங்களில் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தேர்வுத்துறை இணை இயக்குநர் விசாரித்துள்ளார். அதில், தேர்வுத்தாள் போளூர் ஆக்ஸீலியம் மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளியானது தெரியவந்தது. அதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன், போளூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போளூர் போலீசார