Posts

Showing posts from February 16, 2022
  10, 12ஆம் வகுப்பு வினாத்தாள் நடைமுறையில் மாற்றம்; தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் 10, 12ஆம் வகுப்பு திருப்புதல்தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே வெளியானநிலையில், வினாத்தாள் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதன்படி , வினாத்தாளை தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புமாணவர்களுக்கான முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது . பொதுத் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதே போன்று திருப்புதல் தேர்வும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நடத் தப்பட வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன . இந்நிலையில் , 10 ஆம் வகுப்பு மாண வர்களுக்கான அறிவியல் மற்றும் கணிதப் பாடதேர்வுகள் 14.2.2022 அன்று நடை பெற்றன . ஆனால் , இந்த பாடங்களுக் கான வினாத்தாள் 13.2.2022 அன்று காலையிலேயே சமூக ஊடகங்களில் வெளியானது . இந்த சம்பவம் தொடர் பாக அரசு தேர்வுகள் இணை இயக்குநர் பொன் . குமார் , திருவண்ணாமலையில் விசாரணை நடத்தினார் . அதேபோல் , 14.2.2022...
Image
  TN TRB முதுகலை ஆசிரியர்  தேர்வர்களுக்கு அதிர்ச்சி!.. வெளியான பரபரப்பு தகவல்.. !!!! தமிழகத்தில் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB ) 6 தேர்வுகளை நடத்தி அதன் மூலம் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 9,499 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உடற்கல்வி இயக்குனர் நிலை-1, முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் பி.எட், எம்.எட் படித்த பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை உயிர் வேதியியல், தாவரவியல் ஆகிய பாடப்பிரிவிற்கும், நேற்று மதியம் உடற்கல்வி, விலங்கியல் பாடப்பிரிவிற்கும் இணையவழி மூலம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு நேற்று நாமக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த 4 மையங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் 11 கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களிலும் நடைபெற்றது. ஆனால் பலரும் இந்த தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தைச் ...
Image
  தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து 75 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல் தமிழகத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் (சென்னை மற்றும் மதுரை)இயங்கி வருகின்றன. இவற்றில்பதிவு செய்பவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வர வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடைமுறையில் இருக்கும். அப்படி தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,88,159 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண்கள் 35,56,087 பேரும், பெண்கள் 40,32,046 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 228 பேரும் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்ப...
Image
  TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்.. தேர்வாணைய தலைவர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்...!!!! தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணி இடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதால் போட்டித் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 2022ம் வருடத்துக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அந்த அட்டவணையில் நடப்பு ஆண்டில் 32 வகை போட்டித் தேர்வுகளானது நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பல்வேறு புதிய விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இனிவரும் போட்டித் தேர்வுகள் காலை 9:30 மணிக்கு தொடங்கபடும். தமிழ் மொழித் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு தொகுத்தேர்வாக அமையும். இதில் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். டிஎன்பிஎஸ்சி நிரந்தர கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் ஆகிய பல விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்...