Posts

Showing posts from February 14, 2022
Image
  வினாத்தாள் கசிவு - 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை : நந்தகுமார் 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததைதையடுத்து, இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுகள் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், போளூர் ஆக்சிலியம், வந்தவாசி காசினி மெட்ரிக் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வுத்துறை இயக்குனரின் வழிகாட்டுதலை பின்பற்றத்த அரசு அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க...
Image
  பொதுத்தேர்வு: தமிழகம் முழுவதும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு...!!!!! தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வருகிற 16-ம் தேதி மழலையர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதனிடையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பல்வேறு தருணங்களில் விளக்கியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன்படி பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருக்கின்றன. தற்போது 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வானது நடைபெற்று வருகிறது. அதன்பின் மார்ச் மாதத்திற்குள் பாடத்திட்டங்களை விரைவாக முடித்து 2-வது கட்ட திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் வருகிற நாட்களில் சனிக்கிழமை...
  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் அதிகாரிகள் இன்று ஆலோசனை   பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.\ தமிழகத்தில், கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. நர்சரி பள்ளிகளையும், ௧6ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.  இதுதொடர்பாக, பள்ளி கல்வி அதிகாரிகளும், அரசு தேர்வு துறை அதிகாரிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.இதில், பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது; ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி விடுவதா; தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு உட்பட மற்ற வகுப்புகளுக்கு எப்போது தேர்வு நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது.பின், சுகாதார துறையினருடன் ஆலோசிக்கப்ப...
  அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால், பல இடங்களில் பாடம் நடத்தாமல் பிளஸ் 2 மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.'தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து விட்டது; மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது' என, பள்ளி கல்வி அதிகாரிகளும், அமைச்சரும் கூறி வருகின்றனர். இதை நம்பி, அரசு பள்ளிகளை தேடி வந்த பல மாணவர்கள், சரியாக பாடம் நடத்தப்படாததால், அவதிக்கு ஆளாகியுள்ளனர்.குறிப்பாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சில பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களே இல்லை. பணியில் உள்ளதாக கணக்கில் உள்ள ஆசிரியர்கள் பலரை, கற்பித்தல் அல்லாத மாற்று பணிக்கு அனுப்பி உள்ளனர்.குறிப்பாக வீடியோ பாடம் சூட்டிங் எடுக்கவும்; மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் நிர்வாக பணிகள் உள்ளிட்ட மாற்றுப் பணிக்கு அனுப்பி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வேலுார் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளில் வேதியியல் பா...