Posts

Showing posts from February 13, 2022
Image
  ஆசிரியர் இடமாறுதலை உரிமையாக கோர முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 'இடமாறுதலை அரசு ஊழியர்கள் ஒரு போதும் உரிமையாக கோர முடியாது' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தரவு:இடமாறுதல் என்பது பணி நிபந்தனைகளில் ஒன்று. இடமாறுதலை அரசு ஊழியர்களால் ஒரு போதும் உரிமையாக கோர முடியாது. பொது நலன் கருதி, பணியாளரை இடமாற்றம் செய்வது, திறமையான மற்றும் பயனுள்ள நிர்வாகத்தை உறுதி செய்வது பொது நிர்வாகத்தின் தனிச் சிறப்பு. அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலந்தாய்வு கொள்கையானது, அரசு ஊழியர்களுக்கான சலுகையாகும். விதிமுறைகள், நிபந்தனைகளின் படி, தகுதிக்குட்பட்டு இடம் அல்லது பதவியை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, ஒரு சலுகையை உரிமையாக கோர முடியாது. கலந்தாய்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் தகுதிகளை சரிபார்த்து, அதற்கேற்ப உரிய முடிவு எடு...
  நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு, ஆசிரியர் பணிக்கு 2 தகுதி தேர்வு வைப்பது ஏன்? - அண்ணாமலை கேள்வி நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு 2 தகுதித் தேர்வை வைப்பதற்கான காரணம் என்ன என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வுக்கு மறுப்புத் தெரிவிக்கும் திமுக, ஆசிரியர் பணிக்கு பி.எட். தேர்வு மதிப்பெண் இருந்தும், டெட் தேர்வை நடத்துகிறார்கள். மேலும், டெட் தேர்வில் தேர்வானவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தகுதித் தேர்வு நடத்துகிறார்கள். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று எதிர்ப்புத் தெரிவிக்கும் திமுக, 2 டெட் தேர்வுகளை நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? 2017-ல் டெட் தேர்வெழுதி ஆசிரியர் பணிக்குத் தேர்வு பெற்றவர்கள் பணி நியமன ஆணைக்கு காத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு மீண்டும் ஒரு தகுதித்தேர்வு எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், டெட் தேர்வில் தேர்வான அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைதர வேண்டும் என்று வலியுறுத்தினர். கிராம சபைக் கூட...
  தமிழகத்தில் பள்ளி பரிமாற்றத் திட்டத்தை 16,432 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த உத்தரவு தமிழகத்தில் பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தை 16,432 அரசுப் பள்ளிகளில் பிப்.21-ஆம் தேதி முதல் பிப்.25-ஆம் தேதி வரையிலான நாள்களில் இணைய வழியில் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒரு பள்ளிக்கு ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.1.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு வெளியுலக அறிவை மேம்படுத்தவும், பல்வேறு சூழல்களில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ள கற்றல் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிப் பரிமாற்ற திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளி மாணவா்களும், மற்ற பள்ளி மாணவா்களுடன் அறிவுசாா் விவாதங்களில் பங்கேற்பது, மேலாண்மை பண்புகளை வளா்த்துக் கொள்ளுதல், கலாசார பண்புகளை பாதுகாப்பது திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவா்கள் பிற பள்ளிகளில் உள்ள வசதிகள், கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப் பயணமாக அந்தப் பள்ளியைச் சுற்றியுள்ள வளங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங...
  TRB: தேர்வு மையத்தில் நகை, பெல்ட் அணிந்து வரக்கூடாது.. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் சர்ச்சை.. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 20 வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று தேர்வுகள் நடைபெறாது.3 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வு 2 ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் தேர்வுகள் தொடங்கும். இந்நிலையில் தேர்வு எழுத வருவோருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் தேர்வர்களின் ஹால்டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன. * தேர்வர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் கட்டாயம். ஒரு தவணை தடுப்பூசி போட்டோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் காலக்கெடு முடிந்திருக்கக் கூடாது. * தடுப்பூசி போடாதோர் தேர்வு நேரத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் சோதனை செய்திருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை எடுத்து வர வேண்டும். * இதற்காகத் தேர்வர்கள் 1.30 மணி நேரம் முன்னதாக அதாவது முதல் ஷிஃப்டுக்கு 7.30 மணிக்கும், 2-வது ஷிஃப்டுக்கு...
Image
  TNPSC குரூப் தேர்வுகள்: இன்னும் 15 நாள்தான்... ஆன்லைனில் லாகின் செய்து பதிவு செய்யுங்கள் TNPSC ஆன்லைனில் பதிவு செய்திருப்பவர்கள் Aadhar எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் - பிப்ரவரி 28 கடைசி நாள். TNPSC-யில் ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என ஏற்கனவே பலமுறை இதற்கான அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கியுள்ள நிலையில், மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும், தெரிவு முறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவு செய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration - OTR) கணக்கு வைத்திருக்கு...