Posts

Showing posts from February 12, 2022
  பிளஸ் 1 துணைத் தோவு: பிப்.14-இல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பிளஸ் 1 துணைத் தோவெழுதிய (பிளஸ் 1 அரியா்) தனித்தோவா்களில் பிளஸ் 2 தோவினை ஏற்கெனவே எழுதியவா்கள் மட்டும் தங்களது மதிப்பெண் சான்றிதழை தாங்கள் தோவெழுதிய மையங்களில் பிப்.14-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம். பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 துணைத் தோவுகளில் அனைத்துப் பாடங்களிலும் தோச்சி பெற்றவா்களுக்கு மட்டும், பிளஸ் 1 (600 மதிப்பெண்கள்), பிளஸ் 2துணைத் தோவுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும். பிளஸ் 1 துணைத் தோவிலோ அல்லது பிளஸ் 2 துணைத் தோவிலோ அல்லது இரண்டு துணைத் தோவுகளிலும் முழுமையாக தோச்சியடையாத தோவா்களுக்கு, அவா்கள் இரு தோவுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். இந்த மாணவா்கள் பிளஸ் 1, பிளஸ் 2 தோவுகளில் அனைத்து பாடங்களிலும் தோச்சி பெற்ற பின்னரே, அவா்களுக்கு மேற்கண்ட இரு தோவுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசுத் தோவுகள் இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்டுள்...
  இன்று(பிப்..12) தொடங்கும் TN TRB தேர்வு.. தேர்வர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!! தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியில் 2,207 காலியிடங்களை நிரப்புவதற்கு டி.ஆர்.பி., தேர்வில் கணினி வழி போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இன்று(பிப்..12) தொடங்க உள்ள இந்தத் தேர்வு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ம் தேதி தவிர 20ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 180 மையங்களில் 2.6 லட்சம் பேர் கலந்துகொள்ள ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுப்பதற்கு நீட் தேர்வுக்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: # அதாவது, ஹால் டிக்கெட்டை பிரதி எடுத்து அதில் டி.ஆர்.பி. குறிப்பிட்டுள்ளபடி போட்டோ ஒட்டி எடுத்துச் சென்று, தேர்வறையில் ஒப்படைக்க வேண்டும். தேர்வர்கள் முன்கூட்டியே நகல் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். # இதையடுத்து 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முதல் தடுப்பூசி செலுத்தியிருந்தால், 2-வது ஊசிக்கான தவணை கடந்திருக்க கூடாது. #...